Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசர்வ் வங்கி ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க மத்திய நிதியமைச்சகம் முடிவு?

Webdunia
சனி, 25 ஜூலை 2015 (07:46 IST)
வட்டி விகிதம் தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளிட்டவை, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரிடமிருந்து மாற்றியமைக்கும் வகையில், இந்திய நிதி தொடர்பான விதிமுறைகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.
 
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள திருத்தி அமைக்கப்பட்ட இந்திய நிதி தொடர்பான விதிமுறைகளில், வட்டி விகிதம் தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.
 
முக்கியமான நிதி முடிவுகளை எடுக்கும் சக்திவாய்ந்த குழுவில் அரசின் சார்பில் நான்கு பிரதிநிதிகளும் இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் மூன்று பிரதிநிதிகளும் இருப்பார்கள் என்றும் இந்த வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நிதி தொடர்பான முடிவுகளை எடுப்பதற்குமுன்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஒரு தொழில்நுட்ப குழுவுடன் ஆலோசனை நடத்தும் போதும், முடிவுகளை எடுக்கும்போது அந்தக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி செயல்பட வேண்டும் என்ற நடைமுறை தற்போது பின்பற்றப்படுவதில்லை.
 
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்த வரைவு முதன்முதலில் அளிக்கப்பட்டபோதும், இந்தக் குழு பற்றி அதில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது என்றாலும், அந்தக் குழுவின் பெரும்பான்மை முடிவுக்கு எதிராக ஆளுநர் முடிவுகளை எடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், வட்டி விகிதம் தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கி ஆளுநரிடமிருந்து பறிக்கப்பட்டும் வகையில் நிதி விதிமுறை வரைவு திருத்தியமைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தககது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments