Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

96 ரூபாயில் ஆன்லைனில் பான்கார்ட்!! எப்படி பெறுவது?

96 ரூபாயில் ஆன்லைனில் பான்கார்ட்!! எப்படி பெறுவது?
, சனி, 5 நவம்பர் 2016 (12:32 IST)
அரசின் பல சேவைகளை பெறுவதற்கு பான் கார்டின் அவசியம் அதிகரித்துள்ளதால், வருமான வரி தாக்கல் செய்யாத பலரும் பான் கார்டை பயன்படுத்தி வருகின்றனர்.


 
 
இந்த கார்டின் தேவை சில வருடங்களாக அதிகரித்திருப்பதால், ஏராளமானோர் இதைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கின்றனர்.
 
ஆன்லைனில் பான் கார்ட்:
 
ஆன்லைன் மூலம் பான் கார்ட் விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள் சில....
 
வருமான வரி பான் சேவைப் பிரிவின் பின்வரும் இணையத்தள முகரிக்குச் செல்லவும் - https://tin.tin.nsdl.com/pan/
 
இதில் புதிய பான் விண்ணப்பப் படிவம், தகவல் அறிதல், ட்ராக்கிங்க் ஸ்டேடஸ், பான் கார்ட் ரீ-பிரிண்ட் செய்தல் மற்றும் பான் கார்ட் விபரங்கள் மாற்றம் செய்தல் அல்லது திருத்தங்கள் செய்தல் ஆகிய தேர்வுகள் இருக்கும். விண்ணப்பதாரர் தனக்குப் பொருத்தமான ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.
 
பான் கார்ட் விண்ணப்பம்:
 
புதிதாக பான் கார்ட் விண்ணப்பம் செய்வதற்கு படிவம் 49ஏ ஐ பயன்படுத்த வேண்டும். 
 
https://tin.tin.nsdl.com/pan2/servlet/NewPanApp என்ற இணையத்தள முகவரியில், படிவம் 49ஏ ஐ ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்ய முடியும். விபரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்கவும். 
 
ஆன்லைன் மூலம் இந்த படிவம் சரியான முறையில் சமர்ப்பிக்கப் பட்ட பின்னர், இதற்கான அக்னாலேஜ்மென்ட், டிஸ்ப்ளே செய்யப்படும். இதில் 15 இலக்க அக்னாலேஜ்மென்ட் நம்பரை பிரிண்ட் செய்து வைத்துக்கொள்ளவும்.
 
புகைப்படம் சமீபத்தில் எடுத்த இரண்டு கலர் புகைப்படங்களை, இந்த அக்னாலேஜ்மென்ட் படிவத்தில் அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒட்ட வேண்டும். அதே போல் குறிக்கப்பட்ட இடங்களில் கையெழுத்திட வேண்டும். 
 
பான் விண்ணப்பத்திற்காக ரூ.96/- கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை காசோலை, டிமான்ட் ட்ராப்ட், இன்டர்நெட் பாங்கிங், கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூல்ம் செலுத்தலாம். 
 
ஆப்ளிகேஷன் டிரக்கிங் அக்னாலேஜ்மென்ட் படிவத்தை அனுப்பிய பின்னர், ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்ப ஸ்டேடஸ் பற்றி தெரிந்து கொள்ள முடியும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காற்றை சுவாசிப்பது 40 சிகரெட் குடிப்பதற்கு சமம் : எங்கு தெரியுமா?