Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனமுத்தா போச்சா... பயனர்களுக்கு பல்பு கொடுத்த BSNL!!

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (12:28 IST)
ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ ஆகியோரின் அதிரடி அறிவிப்பை தொடர்ந்து  பிஎஸ்என்எல் நிறுவனமும் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
ஜியோவின் வருகைக்குப் பிறகு பிற இந்திய தொலை தொடர்பு நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதில் முன்னணி நிறுவனங்களாக இருந்த ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் தப்பவில்லை. 
 
இந்நிலையில் பங்குகள் சரிவு மற்றும் நஷ்டம் காரணமாக வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களும் தங்கள் சேவைக்கட்டணத்தை டிசம்பர் மாதம் முதல் உயர்த்துவதாக் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோவும் தங்களது சேவை கட்டணத்தை உயர்ந்துவதாக அறிவித்தது. 
இதனைத்தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனமானது பிற தனியார் தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்களை போலவே டிசம்பர் மாதத்தில் அதன் கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 
 
தற்போது வரையில் கட்டண உயர்வு எந்த அளவிற்கு இருக்கும் என எந்த நிறுவனங்களும் செய்திகள் வெளியிடாத நிலையில் 35% முதல் 40% வரையிலான கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments