ஜியோவுடன் இணையும் ஐபோன்

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2016 (17:20 IST)
ஐபோன் விற்பனையை இந்தியாவில் அதிகரிக்க ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைய திட்டமிட்டு வருகிறோம் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.


 

 
ஆப்பிள் ஐபோன் கொஞ்ச காலமாகவே உலகளவில் விற்பனையில் சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் இடத்தில் இருந்த சாம்சங் பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது.
 
இந்தியாவின் ஐபோன் விறப்னை மற்றும் பயனாளர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தியாவில் தற்போது ஐபோன் விற்பனை 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் கூறியதாவது:-
 
இந்தியாவின் இளைய தலைமுறையினர் 4ஜி சேவையை நோக்கி முன்னேறி வருகின்றனர். இதனால் ஸ்மார்ட்போன்களுக்கான தேவை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. 
 
ஐபோன் விற்பனையை இந்தியாவில் மேலும் அதிகரிக்க ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைய திட்டமிட்டு வருகிறோம். இந்தியாவில் உள்ள 50 சதவீதம் மக்கள் 25 வயதுக்கு குறைவானவர்களாக இருப்பதால் ஐபோன் விற்பனைக்கான தேவை அதிகரித்து வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments