Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஎஸ்என்எல்: ரூ.118-க்கு டேட்டா + கால் (அன்லிமிட்டெட்)...

Webdunia
புதன், 16 மே 2018 (11:04 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை போன்று அடிக்கடி சலுகைகளை வழங்காமல் அவ்வப்போது சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை கவனிக்கிறது.
 
அந்த வகையில் தற்போது ரூ.118-க்கு அனிலிமிடெட் சேவையை பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சலுகைகள் வழங்கப்படுகின்றன.
 
1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், பிஎஸ்என்எல் சார்பில் டியூன் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த டியூன்களை மாற்றும் போது அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்.
 
ரிலையன்ஸ் ஜியோ ரூ.98-க்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. 
 
ஏர்டெல் ரூ.93-க்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 1 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்குகிறது. ஐடியா ரூ.109-க்கு அன்லிமிட்டெட் அழைப்புகள், 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments