வங்கிகள் நமக்கு சேவை அளிப்பதை தவிர்த்து, சில சமயம் தனக்கே உதவி செய்து கொள்கிறது. அவ்வறு செய்யும் போது சில முரண்பாடுகள் வெளியாகிறது. அவற்றில் சில....
காசோலையை கணக்கில் வரவு வைத்தவுடனேயே அந்த பணம் கணக்கில் வந்து விடாது. அதற்கு சிறிது காலம் தேவைப்படும். அது வெளியூர் காசோலையாக இருந்தால் இந்த கால அளவு அதிகமாக இருக்கும்.
2012 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி, மின்மயமாக்கி காசோலைகளை விரைவில் பணமாக்க உத்தரவிட்டது. அது வரையிலும் வெளியூர் காசோலைகளை பணமாக்க குறைந்தபட்சம் 15 நாட்களில் இருந்து 3 வாரங்கள் வரை காலம் இருந்து.
ஆனால், எவ்வளவு அதிக நாட்கள் கால தாமதமாக பணம் கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிற்தோ, அந்த அளவிற்கு வங்கிக்கு லாபம்.
இந்த பணத்தை எல்லாம் வங்கிகள் தடையற்ற நிதி ஆதாரங்களாக கொண்டிருக்கின்றன.
2011 ஆம் ஆண்டில் மட்டும், இவ்வகையில் கணக்குகளில் செலுத்தப்பட்ட காசோலைகளை தாமாதமாக்கி சுமார் 620 கோடிகள் வரை வங்கிகள் சம்பாதித்துள்ளன.
காசோலை பவுன்ஸ்:
செக் பவுன்ஸ் ஆவதை தவிர்க்கும் நோக்கில் மிகப்பெரிய தொகைகளை நடப்பு கணக்கில், வங்கிகளுக்கு மிகவும் வசதியாக விட்டு வைப்பார்கள்.
இதன் மூலம், வங்கிகளின் சேமிப்பு கணக்கில் பணத்தை வைக்கும் போது உங்களுக்கு தர வேண்டிய வட்டியை வங்கிகள் தர வேண்டியிருப்பதில்லை.
பின் தேதியிட்ட காசோலைகள்:
வங்கி கணக்கில் எதிர்பார்க்கும் அளவு பணம் வரும் என்று எண்ணி, பின் தேதியிட்ட காசோலையை தயார் செய்வீர்கள்.
ஆனால், அதில் குறிப்பிட்டுள்ள நாளுக்கு முன்னதாகவே அந்த காசோலையை வங்கிகளில் செலுத்தி பணமாக்கலாம்.
இவ்வாறு செய்யும் போது செக் பவுன்ஸ் ஆகும். நிறைய பிரச்னைகள் வரும். எனவே, இதை தவிர்க்கவும்.
இணைய வழியில் படிவங்கள்:
இணைய வழியில் படிவங்களை நிரப்பி கேட்டுக் கொள்ளுதல், வாடிக்கையாளர் சேவையில் கேட்டல் அல்லது வங்கிக்கு நேரடியாக சென்று வருதல் போன்றவை வங்கி நமக்கு சேவை அளிக்கும் முறைகளாகும்.
ஆனால், இவை எல்லாவற்றிலும் சிறந்த மற்றும் பலன் தரக் கூடிய வழிமுறை வங்கிக்கு நேரடியாக சென்று வருவது தான்.
வாடிக்கையாளர் சலுகைகள்:
பிற நிறுவனங்களைப் போலவே, நெடுநாட்கள் கணக்கு வைத்துள்ள, உண்மையான வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் சில சலுகைகளை வழங்கும்.
ஆனால், பெரும்பாலான நேரங்களில் வங்கிகள் இந்த விஷயத்தை விளம்பரப்படுத்துவதில்லை.
நெடுநாள் வாடிக்கையாளர்களுக்கு கட்டண விலக்குகளையும் கூட வங்கிகள் தருகின்றன என்பது குறிப்பிடதக்கது.