ஆனால் அதற்கு பிறகு இரண்டின் விலைகளும் டிசம்பர் 2 ஆம் தேதி வரை குறையாமல் சீராக அதிகரித்தன. இதற்கு முன் இல்லாத வகையில் டிசம்பர் 2 ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.18,220 ஆக உயர்ந்தது.
24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.18,310 ஆக அதிகரித்தது.
தங்கத்திற்கு போட்டியாக வெள்ளியின் விலையும் அதிகரித்தது. சென்ற வருட இறுதியில் 1 கிலோ வெள்ளி ரூ.18,100 ஆக இருந்தது. இந்த வருடம் மட்டும் 10 ஆயிரத்து 5 ரூபாய் அதிகரித்து, 1 கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.28,105 ஆக உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்ததற்கு முக்கிய காரணம் சென்ற வருட இறுதியில் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி எனலாம். இந்த நெருக்கடியால் எல்லா தரப்பினரும் என்றும் மதிப்பு குறையாத தங்கம், வெள்ளியில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர்.
அத்துடன் சர்வதேச வர்த்தகத்திற்கு பயன்படுத்தும் செலவாணியாக உள்ள அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து குறைந்தது. குறிப்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு நாணயமான யூரோ, ஜப்பானிய நாணயமான யென் ஆகியவைகளுக்க நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்தது.
பல நாடுகள் தங்களின் அந்நிய செலவாணி இருப்பை டாலர் மதிப்பில் உள்ள அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளனர். அமெரிக்க ரிசர்வ் வங்கி, கடன் பத்திரங்கள் மீதான வட்டியை தொடர்ந்து குறைத்தது. டாலர் மீதுள்ள நம்பிக்கை குறைந்ததால், பல நாடுகள் அமெரிக்க கடன் பத்திரங்களை விற்பனை செய்து, தங்கம், வெள்ளியை வாங்க ஆரம்பித்தன.
இதன் விளைவாக வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை அதிகரித்தது. சர்வதேச சந்தையில் டிசம்பர் மாதத்தில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 1200 டாலராக உயர்ந்தது. இதே போல் வெள்ளியின் விலையும் அதிகரித்தது.