கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது ஏன்?

Webdunia
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத  புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். 

தமிழர்கள் கொண்டாடிய புராதனப் பண்டிகைகளில் ஒன்று திருக்கார்த்திகை. விஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதி ஒளிப்பிழம்பாய், சிவன் காட்சியளித்த நாள் கார்த்திகை பெளர்ணமியாகும்.
 
எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.  விளக்கினை ஏற்றி வைப்பதோடு இதோ இங்கே தரப்பட்டுள்ள துதியினையும் சொல்லுங்கள். தீப லட்சுமியின் அருளால் உங்கள்  வாழ்வில் அஷ்டலட்சுமி கடாட்சம் சேரும்.
 
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின்  வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. 
 
தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின்,  இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபாக பின்பற்றப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!

திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்!.. நீண்ட நேரம் காத்திருந்த சாமி தரிசனம்...

நாளை சூரிய பொங்கல் வைக்க எது நல்ல நேரம்?.. வாங்க பார்ப்போம்!...

தினமும் 3 லட்சம் பேருக்கு உணவு!.. பசியாற்றும் திருப்பதி தேவஸ்தான அன்னதான திட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் மூடப்பட்டது.. இன்று முதல் வழக்கமான சேவைகள் தொடரும்..

அடுத்த கட்டுரையில்
Show comments