Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழையன கழித்து, புதியன புகவிடும் போகி பண்டிகை!

Webdunia
போகிப் பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய பொருட்களை எரித்து  தமிழக மக்கள் போகி கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கு ஏற்ப, பழைய  பொருட்களை தீயிட்டு எரித்து, போகி பண்டிகையை மக்கள் இன்று கொண்டாடுகின்றனர்.

 
பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நெடுங்காலமாக இந்த போகி திருநாளில் பழைய  பொருட்களை எரிக்கும் பழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. போகிக் பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து,  திருப்தி செய்ய வேண்டிய நாள்.
 
போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய  துடைப்பம் போன்ற குப்பைகள், தேவையில்லாத பழைய பொருட்கள் ஆகியவற்றை  தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால்  வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். பிறகு வீட்டின் வாசலை கழவி சுத்தம் செய்து அழகான கோலம்  போடம் பழக்கம் உண்டு. 
 
போகி தினத்தன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பிடித்த உணவை  படைத்து, புத்தாடகள் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து தீப ஆராதனை செய்து வழக்கத்தில்  உள்ளது. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.
 
பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை  ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது  குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். இவ்வாறாக பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்த போகி  பண்டிகை அமைந்திருக்கும்.
 
போகிப் பண்டிகை 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும்   விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான   எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வராமல் இருந்த பணம் வந்து சேரும்!– இன்றைய ராசி பலன்கள்(18.12.2024)!

2025 New Year Astrology: 2025 புத்தாண்டு ராசிபலன் – கும்பம் | Kumbam 2025 Rasipalan

2025 New Year Horoscope: 2025 புத்தாண்டு ராசிபலன் – மகரம் | Magaram 2025 Rasipalan

இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும்!– இன்றைய ராசி பலன்கள்(17.12.2024)!

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் சிறப்புகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments