சிறிய அளவு நீர் சுத்திகரிப்பு நிலையம்: பாபா அணு சக்தி மையம் உருவாக்கம்

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2010 (12:31 IST)
சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும் சிறிய அளவிலான குடி நீர் சுத்திகரிப்பு அமைப்பு ஒன்றை பாபா அணு சக்தி மையம் உருவாக்கியுள்ளது.

நான்கு முதல் ஐந்து குடும்பங்களுக்கு, தலைக்கு 5 லிட்டர் வீதம் ஒவ்வொரு நாளும் பெறக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சுத்திகரிப்பு அமைப்பு, எதிர் சவ்வூடு பரவல் முறையில் உப்பு நீரை தூய குடி நீராக மாற்றித்தரக் கூடியதாகும் என்று இதனை உருவாக்கிய குழுவின் தலைவர் சாலி டி. பணிக்கர் கூறியுள்ளார்.

சூரிய சக்தியால் இயங்கும் இதனை ஒவ்வொரு நாளும் 9 முதல் 10 மணி நேரம் பயன்படுத்தி தூய குடி நீரைப் பெறலாம்.

கடல் நீரை சுத்திகரித்து குடி நீராக்கி அணு மின் நிலையத்தின் குடி நீர் தேவையை ஈடு செய்யும் பெரும் சுத்தகரிப்பு நிலையம் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் இயங்கி வருகிறது. அதே அடிப்படையிலேயே சூரிய சக்தியில் இயங்கும் இந்த சிறிய அளவு குடி நீரி சுத்திகரிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ்க்கு ஒருபோதும் அதிமுகவில் இனி இடமில்லை.. பாஜகவுக்கு 30 தொகுதிகள்: சேலம் மணிகண்டன்

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மையத்தில் மெஸ்ஸி.. யானையுடன் கால்பந்து விளையாடினார்..!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகாது.. ஒரே ஒரு காரணம் இதுதான்..!

2 இரட்டை இலைக்கு 1 தாமரை. தொகுதி பங்கீட்டில் அண்ணாமலையின் ஆதிக்கம்..!

சீமான் கூட நிரூபிச்சிட்டாரு!.. விஜய் ஒன்னுமில்ல!.. இராம சீனிவாசன் நக்கல்!.

Show comments