Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விஜ‌ய் டி‌வி‌யி‌ல் வார்த்தை விளையாட்டு

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2010 (12:09 IST)
பு‌திய போ‌ட்டி ‌நிக‌ழ்‌ச்‌சிகளை அ‌றிமுக‌ப்படு‌த்துவ‌தி‌ல் முத‌ன்மையானதாக இரு‌க்கு‌ம் ‌விஜ‌ய் டி‌வி ஒரு வா‌ர்‌த்தை ஒரு ல‌ட்ச‌ம் எ‌ன்ற பு‌திய வா‌ர்‌த்தை ‌விளையா‌ட்டு ‌நிக‌ழ்‌ச்‌சியை அ‌றிமுக‌ப்படு‌த்‌‌தியு‌ள்ளது.

சொல் திறமைக்கும், வார்த்தைகளை கண்டுபிடிக்கும் திறமைக்கும் சவால் விடும் அறிவுசார்ந்த இந்த நிகழ்ச்சியில் வார்த்தைகளை சரியாக கண்டுபிடித்து வெற்றி பெறுபவர்கள் ஒரு லட்சம் ரூபாய் பரிசுப்பணம் வெல்லலாம்.

இந்த வார்த்தை விளையாட்டை இரண்டு அ‌ணிக‌ள ் விளையாடலாம். இரண்டு நபர்களைக் கொண்டது ஒரு அ‌ண ி. முதல் வரும் சுற்றுக்களில் வார்த்தைகள் முற்றிலும் தமிழில் அமைந்திருக்கும். அந்தந்த அ‌ணி‌யி‌ல ் உள்ள ஒருவர், கொடுக்கப்படும் வார்த்தைக்கு மாற்று வார்த்தைகளை தமிழில் தெரிவிக்க வேண்டும். அந்த மாற்று வார்த்தைகளை வைத்து சரியான வார்த்தைகளை மற்றொருவர் கண்டுபிடிக்க வேண்டும்.

இப்படி இரண்டு அ‌ண ிகளுக்கும் தலா ஐந்து முதல் பத்து வார்த்தைகள் வரை வழங்கப்படும். குறைந்த வினாடிகளுக்குள் அதிகப்படியான சரியான வார்த்தைகளை கண்டுபிடிக்கும் ஒரு அ‌ண ி அடுத்த கட்ட விளையாட்டுச் சுற்றுக்குள் நுழையும்.

இதுவே ஒரு லட்சம் ரூபாயை வெல்லக்கூடிய சுற்றாகும். இதில் பத்தாயிரத்தில் தொடங்கி, இருபது ஆயிரம், ஐம்பதாயிரம், எழுபத்தைந்தாயிரம், ஒரு லட்சம் என்ற வரிசையில் பரிசுகள் காத்திருக்கும். ஒன்பது ‌ க்ளு‌க்க‌ளி‌ல் ஐந்து வார்த்தைகளை கண்டு பிடிப்பவர் பத்தாயிரம் வெல்லலாம். எட்டு க்ளூக்களில் ஐந்து வார்த்தைகளை கண்டுபிடிப்பவர் இருபதாயிரத்தை வெல்லலாம். ஏழு க்ளூக்களில் ஐந்து வார்த்தைகளை கண்டுபிடிப்பவர் ஐம்பதாயிரம் வெல்லலாம். இப்படி ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் வாய்ப்புகள் தொடரும்.

இ‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ச‌னி‌க்‌கிழமை தோறு‌ம ் இரவ ு 8 ம‌ணி‌‌க்க ு ஒ‌ளிபர‌ப்பா‌கிறத ு. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடியிலும் கலக்கும் துல்கர் சல்மானினின் லக்கி பாஸ்கர்.. டிரண்ட்டிங்கில் நம்பர் 1!

நெட்பிளிக்ஸ் நெருக்குதலால்தான் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதா?

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

Show comments