தமிழ் பேசும் திறனை வளர்த்திட விஜய் டிவி துவக்கிய ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி, நேயர்களிடையே ஆழ்ந்த தமிழ் பற்றை உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
நேர்முகத் தேர்வுக்குப் பிறகு 12 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில், இப்போது இருப்பதோ வெறும் நால்வர் மட்டுமே!
இந்த நால்வரிலிருந்து மேலும் ஒருவர் நீக்கப்பட்டு மூன்று போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்று அவர்களுக்குள் போட்டி நடைபெறும். இவர்களிலிருந்து வெற்றி பெறும் சிறந்த ஒரு பேச்சாளருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை காத்துக ் கொண்டிருகிறது என்பது குறிப்பிடதக்கது.
webdunia photo
WD
ஓவியச் சுற்று, அரசியல் விவாத மேடை, காப்பியச் சுற்று, சொற்போர், எதுகை மோனை, தமிழா, நீ பேசுவது தமிழா?, வண்ணங்களும் வர்ணனைகளும் என பல்வேறு புதுமையான சுற்றுக்களை முதன் முதலில் இந்நிகழ்ச்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு சுற்றிலும் புதுமை, போட்டியாளர்களின் தமிழ் பேச்சாற்றல் என எல்லா அம்சங்களும் மிகவும் ரசிக்கும்படி அமைந்திருந்தது.
இந்த வாரம் மக்கள் மனசு சுற்று ஒளிபரப்பாகும். சென்ற வாரம் நடைபெற்ற சுற்றில், பிரபல பத்திரிகையாளரான நக்கீரன் கோபால் சிறப்பு விருந்தினராக பங்குபெற்று பத்திரிகை சுதந்திரத்தைப் பற்றி பேசினார ்.
இந்த வாரம் நான்கு போட்டியாளார்களான - அருள் பிரகாஷ், அபிராமி, ராஜ் மோகன், ராமநாதன் ஆகியோர் மக்கள் மனசு சுற்றில் பங்குபெற உள்ளனர்.
webdunia photo
WD
அருள் பிரகாஷ் மற்றும் அபிராமி, 'பெண் சுதந்திரம் ஏட்டளவில் தான் இருக்கிறது' எனும் தலைப்பில் பேசுகின்றனர். இவர்களின் பேச்சாற்றலை மதிப்பிட நாடாளுமன்ற மேலவை உறுப்பினரான திருமதி. வசந்தி ஸ்டான்லி இந்நிகழ்ச்சியில் பங்குபெறுகிறார்.
ராஜ் மோகன் மற்றும் ராமநாதன், 'மகத்துவமானது மருத்துவ பணி', எனும் தலைப்பில் இந்த வாரம் பேசுவர். இவர்களின் பேச்சுத் திறமையை மதிப்பிட மருத்துவர ் ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக பங்குபெறுகிறார். இந்த இரண்டு சிறப்பு விருந்தினருடன் நெல்லைக் கண்ணனும் நடுவராக இருந்து மக்கள் மனசு சுற்றை சிறப்பிக்க உள்ளார். மருத்துவர் மற்றும் பேராசிரியரான இவர், மகத்துவமானது மருத்துவ பணி எனும் தலைப்பில் தனது கருத்துக்களை கூறவுள்ளார்.
வரும் ஞாயிறு, நவம்பர் 30, 2008 காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் வரும் மக்கள் மனசு சுற்றை காணத்தவறாதீர்கள்!