தமிழ் திரையுலகை கலக்கி கொண்டு வரும் இளம் கதாநாயகிகளான தமன்னா, 'தங்க தாரகை' ப்ரியாமணி, என்றும் இளமையோடு இருக்கும் நதியா ஆகியோரின் பிரத்யேக பேட்டிகள் இடம்பெறும்.
' கல்லூரி' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் வகிக்கும் தமன்னாவின் பேட்டியை வெள்ளி, அக்டோபர் 24, 2008 அன்று மாலை 6:30 மணிக்கு கண்டு மகிழுங்கள்!
சனி அக்டோபர் 25 அன்று மாலை 6:30 மணிக்கு பருத்திவீரன் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற பிரியாமணியின் பேட்டி இடம்பெறும்.
webdunia photo
WD
மனம்திறந்து பேசும் நதியாவின் பேட்டி அக்டோபர் மாதம் ஞாயிற்றுக் கிழமை அக்டோபர் 26 அன்று மாலை 6:30 மணிக்கு இடம்பெறும்.
இவர்களோடு நடிகர் பரத்தின் நேர்கானலும் இடம்பெறுகிறது. இது ஞாயிறு, அக்டோபர் 26 இரவு, 10:30 மணிக்கு 'ஏறுமுகம் - பரத்துடன் ஒரு நேர்முகம்' இடம்பெறும்.