Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த நடனப் புயலுக்கான தேடல்

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2008 (14:28 IST)
ஒருவரின் நடன திறமையை நிரூபிக்கும் விதமாக தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத ஒரு புதிய முயற்சிதான், இந்தியாவின் அடுத்த நடனப்புயலுக்கான தேடல் - அமுல் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா. வரும் ஆகஸ்ட் 21 வியாழன் - வெள்ளி இரவு 9 மணி முதல் விஜய் டிவியில் துவங்குகிறது!

முதற்கட்ட தேர்வு திருச்சி, கோவை மற்றும் மதுரையில் கடந்த வாரங்களில் நடந்து முடிந்தது. இதில் நடன இயக்குனர்கள் ஸ்ரீதர் மாஸ்டர் மற்றும் கெளதம் ஆகியோர் திருச்சி மற்றும் கோவையில் நடுவர்களாகவும் மதுரையில் ஸ்ரீர்தர் மாஸ்டர் மற்றும் நடிகை தேஜாஸ்ரீ நடுவர்களாக பங்குபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia photoWD
500 க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த நேர்முகத் தேர்வில் பங்குபெற்று இறுதியாக திருச்சி மாநகரத்திலிருந்து 23 நபர்களும ், கோவையிலிருந்து 27 நபர்களும ், மதுரையிலிருந்து 20 நபர்களும் அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் வெ‌ற்‌றி பெறு‌ம ் அதிர்ஷடசாலிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை என்பது குறிப்பி ட‌த ்தக்கது.

சென்னை முதற்கட்ட தேர்வில் ஆர்வமுள்ள பலர் கலந்துக் கொண்டனர். ஆர்வமுள்ள பலர் பலவித நடன வகைகளில் தங்களின் நடன திறமையை நிரூபித்து வருகின்றனர். சென்னையில் முதல் நாள் 1500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்குபெற்றனர். இதில் முதல் நாளன்று சுமார் 250க்கு மேற்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஸ்ரீதர் மாஸ்டர் மற்றும் ஒரு சிறப்பு நடுவர் முன் நடமாட உள்ளனர்.

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியை கலக்கப் போவது யாரு புகழ் ரம்யா தொகுத்து வழங்கவுள்ளார். தேர்ந்தெடுக் க‌ப ்பட்டுள்ள எல்லோரும் திறமை வாய்ந்த பல நடுவர்கள், பலவகையான சுற்றுகளை சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

வரும் ஆகஸ்ட் 21, 2008 முதல் வியாழன், வெள்ளி இரவு 9 மணிக்கு அமுல் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments