Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சையில் அரசு கேபிள் டி.வி.

Webdunia
திங்கள், 14 ஜூலை 2008 (12:00 IST)
அரசு கேபிள் டி.வி.‌ யி‌ன் சேவ ை முத‌ற்க‌ட்டமாக தஞ்சையில் நாளை தொடங்கப்படுகிறது. அரசு கே‌பி‌ள் டி‌வி‌‌யி‌ல் த‌‌ற்கா‌லிகமாக 60 அலைவ‌ரிச ைகள் ஒளிபரப்பு செய்யப்பட ு‌ம். இது படி‌ப்படியாக உய‌ர்‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று அரசு கேபிள் டி.வி. கழக‌த்‌தி‌ன ் தலைவர் பிரிஜேஸ்வர்சிங் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தமிழக அரசு சார்பில் அரசு கேபிள் டி.வி. கழக‌‌ம ் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு கேபிள் டி.வி. இணைப்பு வழங்கப்படுகிறது. இதற்காக முதல் கட்டமாக தஞ்சை, கோவை, நெல்லை, வேலூர் ஆகிய 4 இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில் முதல் கட்டமாக தஞ்சையில் செ‌வ்வா‌ய்‌‌க்‌கிழமை முத‌ல ் அரசு கேபிள் டி.வி. சேவை தொடங்கப்படுகிறது. இதனை முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

அரசு கேபிள் டி.வி. கழக‌த்‌தி‌ன ் தலைவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரிஜேஸ்வர்சிங் பேசுகை‌யி‌ல், தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையம் மூலம் தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூர் ஆகிய இடங்களில் ஒளிபரப்பு செய்யப்படும். இதற்கு கட்டணம் அதிக பட்சமாக ரூ.100 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

முதல் கட்டமாக நாளை 60 சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும். பின்னர் படிப்படியாக 70 சேனல்கள் வரை உயர்த்தப்படும். உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பு செய்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் எ‌ன்று கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments