Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் அவார்டுஸ் ரசிகன் எக்ஸ்பிரஸ்

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2008 (12:21 IST)
webdunia photoWD
கலைத் துறையில் சாதனைப் புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில் "விஜய் அவார்ட்ஸ்" என்கிற உயரிய விருதை இந்த ஆண்டும் வழங்க தயாராகிவிட்டது விஜய் டிவி. இந்த வருடமும் கடந்த 2007 ஆம் ஆண்டு விளிவந்த 107 திரைப்படங்களிலிருந்து மொத்தம் 30 பிரிவுகளில் விருதுகளை வழங்க உள்ளது.

இதில் நேயர்களுக்கு பிடித்தமான திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர் ஆகிய 4 பிரிவுகளுக்கான விருதுகளை பொது மக்களின் வாக்கெடுப்பின் மூலமும், மற்ற 26 பிரிவுகளுக்கான விருதுகளை தேர்வு குழுவினரின் மூலமும் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறது.

இதன் முதல் கட்டமாக மக்கள் மனதிற்கு பிடித்தமான 4 பிரிவுகளுக்கான விருதுகளை தேர்ந்தெடுக்க "விஜய் அவார்ட்ஸ் ரசிகன் எக்ஸ்பிரஸ்" வேன் தமிழகத்தின் 11 நகரங்களில் வள்ம வந்து ரசிகர்களிடம் நேரடியாக வாக்கெடுப்பு நடத்தும். வாக்குகளை SMS, இணையதளம் மற்றும் IVR மூலமும் பதிவு செய்யலாம்.

இதன் துவக்க விழா மார்ச் 19, 2008 அன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம நாராயணன், தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் சரத்குமார், தென்னிந்திய திரப்பட தொழிலாளர்கள் சம்மேனத் தலைவர் பெப்ஸி விஜயன் ஆகியோரின் முன்னிலையில், மாண்புமிகு தமிழக தகவல் மற்றும் செய்தித்துறை அமைச்சர் பரிடி இளம்வழுதி அவர்கள் தலைமையேற்று "விஜய் ரசிகன் எக்ஸ்பிரஸ்ஸை" துவங்கி வைக்க உள்ளனர்.

இந்த மாபெரும் நட்சத்திர விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் வெகு விரைவில் நடக்க இருக்கிறது. யூகி சேது மற்றும் நடிகை குஷ்பு தொகுத்து வ ழ‌ ங்க திரையுலகின் பல முன்னனி நட்சத்திரங்களும் திரண்டு வந்து இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை வெற்றி நிகழ்ச்சியாக உருவாக்க உள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments