விஜய் டிவியால் அறிமுகப்படுத்தப்பட்ட கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் 4ஆம் பாகம் வரும் வெள்ளிக்கிழமை 25ஆம் தேதி முதல் துவங்கவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நடந்த நேர்முகத் தேர்வு மூலம் 60 திறமைசாலிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கலக்கப்போவது யாரு - 4 கலக்கல் ஆரம்பத்தில் வெற்றிப் பெறப்போகும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்கும் அரிய வாய்ப்பும் காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் திரைப்படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பும் காத்துக் கொண்டிருக்கிறது.
webdunia photo
WD
இந்த நான்காம் பாகத்தின் நடுவர்களாக உமா ரியாஸ், நடிகர் பாண்டியராஜன் ஆகியோர் வருகின்றனர்.
பல திறமைசாலிகளை உலகறிய வைக்கும் இந்த நிகழ்ச்சி ஜனவரி 25ஆம் தேதி முதல் வெள்ளிதோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும்.