நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழாவில் ரோஜா, மலர்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் கண்காட்சி நடக்கிறது.
கோடை விழா துவக்கமாக ஊட்டி ரோஜா பூங்காவில் நேற்று காலை ரோஜா கண்காட்சி தொடங்கியது.
8 ஆயிரம் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலர்க்கோபுரம், அழகிய வண்ண ரோஜாக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மயில், குதிரை வண்டி, குத்துவிளக்கு, ரங்கோலி போன்றவை அமைக்கப்பட்டிருந்தன.
கொய் மலர், ஏற்றுமதி ரோஜா மலர் அரங்குகள் உள்ளன. இதை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ரசித்து செல்கின்றனர்.