Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2010-இல் சுற்றுலா பயணிகள் வருகை இருமடங்காகும் : அரசு தகவல்!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:13 IST)
அடுத்த மூன்று ஆண்டுகளில் அயல்நாட்டுச் சுற்றுலா பயணிகளின் வருகை இருமடங்கு அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

'' தற்போது ஆண்டிற்கு 44 லட்சம் சுற்றுலா பயணிகள் அயல்நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகின்றனர். இது 2010-இல் 1 கோடியாக அதிகரிக்கும ்'' என்று மத்திய சுற்றுலாத் துறை இயக்குநர் தேவேஷ் சதுர்வேதி தெரிவித்தார்.

மேலும ், '' இந்த ஆண்டு அயல்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை 60 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இணையதள விளம்பரங்கள் நமது நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே பல்வேறு மொழிகளில் உள்ள இணைய தளங்கள் வழியாக நமது நாட்டின் சிறப்பை எடுத்துச் சொல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை ஜப்பான ், சீன ா, பிரெஞ்சு மொழிகளில் நமது இணைய தளங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்காக அரசு ஆண்டிற்கு ரூ.40 கோடி செலவிடுகிறது.

குறிப்பாக 20 முதல் 40 வயது வரையுள்ள பயணிகளை விளம்பரங்கள் அதிகமாக ஈர்க்கின்றன. நமது நாட்டிற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளில் 60 விழுக்காட்டினர் இந்த வயதினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2006 -ஆம் ஆண்டில் 6.56 பில்லியன் டாலர் மதிப்புள்ள அன்னியச் செலாவணி சுற்றுலா மூலம் நமக்குக் கிடைத்தது. இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உள்நாட்டுச் சுற்றுலாவும் நமது மிகப்பெரிய பலமாகும ். கடந்த ஆண்டு 46 கோடி பேர் சுற்றுலா சென்றுள்ளனர ்'' என்றும் சதுர்வேதி கூறினார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments