Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக சுற்றுலா துறைக்கு தேசிய விருது

Webdunia
புதன், 25 பிப்ரவரி 2009 (11:45 IST)
தமிழக சுற்றுலா துறைக்கு தொடர்ந்து இர‌ண்டாவத ு ஆண்டாக, தேசிய சுற்றுலா விருது கிடைத்துள்ளது. இந்த விருதினை, டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம் வழங்கினார்.

இந்திய அரசின் சுற்றுலா துறை, தமிழக சுற்றுலா துறைக்கு 2007-08 ஆண்டுக்கான, தேசிய சுற்றுலா விருதை வழங்கியுள்ளது. கடந்த நிதியாண்டில் (2007-08), தமிழக சுற்றுலா தலங்கள் பற்றி சிறப்பான முறையில் விளம்பரப்படுத்தியதற்காக இந்த விருது, தமிழக சுற்றுலா துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்துவதற்காக, வழக்கமான பணிகளை சுற்றுலா துறை செய்தபோதிலும், விருந்தினர் போற்ற ுதல ும், சுற்றுப்புறத் தூய்மை, பசுமை சார் சுற்றுலா போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. கடந்த ஆண்டில் 17.53 லட்சம் வெளிநாட்டு பயணிகளும், 5.06 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் தமிழகத்துக்கு வந்துள்ளார்கள்.

இதனை‌‌க் கு‌றி‌ப்‌பி‌ட்டு இ‌ந்த ஆ‌ண்டு‌ம் த‌மிழக‌த்‌தி‌ற்கே ‌சிற‌ந்த சு‌ற்றுலா‌த் துறை‌க்கான ‌தே‌‌சிய ‌விருது அ‌‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. ‌விருதுக‌ள் வழ‌ங்கு‌ம் ‌விழா டெல்லியில் நேற்று நடந் தது. விழாவில், தமிழக சுற்றுலா துறை செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா வளர்ச்சித் துறை ஆணையர் எம்.ராஜாராம் ஆகியோரிடம் ‌‌ விரு‌தினை மத்திய உள்துறை அமை‌ச்ச‌ர் சிதம்பரம் வழங்கினார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘கங்குவா’ நடிகர்.. இயக்குனர் ஆர்ஜே பாலாஜி அறிவிப்பு..!

25 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவைத் தொடங்கிய ராம்சரணின் ‘கேம்சேஞ்சர்’ படக்குழு!

மறைந்த நகைச்சுவைக் கலைஞரின் பயோபிக்கில் நடிக்கிறாரா தனுஷ்?

விடுதலை 2 படத்தை சிறுவர்கள் பார்க்கலாமா?... சென்சார் போர்டு அளித்த சான்றிதழ்!

சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நிலை குறித்து கவலை… வழக்கு நடப்பதால் சந்திக்க முடியவில்லை – அல்லு அர்ஜுன் வருத்தம்!

Show comments