Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கும் ஏறி, எங்கும் இறங்கும் திட்டம்

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (12:29 IST)
சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல பேரு‌ந்‌தி‌ல ் எங்கும் ஏறி, எங்கும் இறங்கிக் கொள்ளும் (ஹாப் ஆன்-ஹாப் ஆப் ஸ்கீம்) புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இத ு கு‌றி‌த்த ு சென்னையில் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறுகை‌யி‌ல், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகமும், மாநகர போக்குவரத்துக்கழகமும் தனித்தனியாக இந்த திட்டத்தை செயல்படுத்த உ‌ள்ளன.

அதாவது, மாநகர போக்குவரத்துக்கழகம் சென்னையில் உள்ள மெரினா, வள்ளுவர் கோட்டம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி தேசிய சிறுவர் பூங்கா உள்பட 12 சுற்றுலா மையங்களுக்கு போய் வரும் வகையில் 4 சொகுசு பேரு‌ந்து களை இயக்கும்.

அதுபோல தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், அதன் அலுவலகத்தில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கை சாலையில் உள்ள சுற்றுலா தலங்கள் வழியாக 4 சொகுசு பேரு‌ந்து களை இயக்கவுள்ளது.

இந்தப் பேரு‌ந்து களின் கட்டணம் 200 ரூபாய் அல்லது 250 ரூபாய் இருக்கும். ஒருமுறை டிக்கெட் எடுத்து இந்தப் பேரு‌ந்த ுகளில் நாள் முழுவதும் சுற்றுலா மையங்களுக்குப் போய் வரலாம். இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் எ‌ன்று த‌ெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments