Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்த ஒலிம்பிக் போட்டியையட்டி தீவிர பிரசாரம்!

Webdunia
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (18:38 IST)
இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக நாளை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள சீனாவில் பல்வேறு வகையில் சுற்றுலா குறித்து விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் கலை, கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் பற்றி உலகம் முழுவதும் தெரியவைத்து அதன் மூலமாக வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நோக்கத்துடன் 'இன்கிரெடிபிள் இந்திய ா' இயக்கத்தை மத்திய சுற்றுலா அமைச்சகம் செயல்படுத்தி வருகிறத ு.

சீனாவில் 29-வது ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகின்றன. இதைக் காண உலகின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு, இந்திய சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலான விளம்பரங்கள், பிரசாரங்கள் சீனாவில் அதிகளவில் செய்யப்பட்டு வருகின்றன.

சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், முக்கிய சந்திப்புகளில் கடந்த ஒரு மாதமாக இந்திய சுற்றுலா பற்றிய பிரசாரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. விளம்பரப் பலகைகளும் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன. நாளிதழ்களில் சிறப்பு விளம்பரங்கள் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் சுதந்திரதினக் கொண்டாட்டம் பற்றியும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. சீன சுற்றுலா அமைப்புகள், பத்திரிகையாளர்கள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டத்துக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவின் பல சுற்றுலாத் தலங்களுக்கும் சென்ற சீன புகைப்படக் கலைஞர் டாக்டர் மாவோ சியாயுவின் புகைப்படக் கண்காட்சியும் நடக்கவுள்ளது. இந்திய கலைப் பொருட்கள், ஜவுளிக் கண்காட்சியும் நடக்கிறத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

கம்ல்ஹாசனின் அடுத்த படத்தில் இணையும் ஜி வி பிரகாஷ்… அமரன் கொடுத்த வாய்ப்பு!

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

Show comments