Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌தீவு‌த் ‌திட‌லி‌ல் சுற்றுலா பொருட்காட்சியை 15 லட்சம் பே‌ர் பா‌ர்வை‌யி‌ட்டன‌ர்!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (12:08 IST)
சென்னை தீவுத் திடலில் 73 நாட்கள் நடந்த சுற்றுலா பொருட்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இ‌ந்த பொரு‌ட்கா‌‌‌‌ட்‌சியை 15 லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

சென்னை தீவுத்திடலில் 34-வது இந்திய சுற்றுலா-தொழில் பொருட்காட்சி கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆ‌ம் தேதி தொடங்கியது. மத்திய, மாநில அரசுத் துறை நிறுவனங்களின் 41 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 118 கடைகள ், 34 தனியார் விற்பனை அரங்குகளும் இடம் பெற்றிருந்தன.

பொருட்காட்சி அண்ணா கலையரங்கில் 97 நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் உள்பட 139 கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சிறுவர்களுக்காக பல்வேறு விளையாட்டுகளுடன் கேளிக்கை வளாகம் அமைக்கப்பட்டிருந்தது. மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்ற இந்த பொருட்காட்சி 73 நாட்கள் நடந்தன.

இதன் ‌ நிறைவு ‌விழா நே‌ற்று நட‌ந்தது. இதில், நிதி அமைச்சர் க.அன்பழகன் கலந்து கொண்டு பேச ுகை‌யி‌ல், 15 லட்சம் பேர் ப ொரு‌ட ்காட்சியை பார்வையிட்டுள்ளனர். இது, கடந்த ஆண்டைவிட 25 வ‌ிழு‌க்காடு அதிகமாகும். அதுபோல கடந்த ஆண்டைவிட வருவாயும் அதிகரித்துள்ளது. எப்போது இல்லாத அளவிற்கு ரூ.1 கோடியே 46 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்றார்.

மே மாதம் கோடைகால பொருட்காட்சி

சுற்றுலா துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசுகையில், ``இந்த பொருட்காட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் வரத்து ஒவ்வொரு ஆண்டும் 22 ‌ விழு‌க்காடு அதிகரிக்கிறது. மத்திய அரசிடம் இருந்து, பாரம்பரிய சுற்றுலாவிற்கான விருதை தமிழக சுற்றுலா துறை பெற்றுள்ளது. இந்த பொருட்காட்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பதைத் தொடர்ந்து, வரும் மே மாதம் கோடைகால பொருட்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments