Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிவியல் கண்காட்சி ரயில் 29ஆ‌ம் தேதி சென்னை வருகை!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (11:22 IST)
அறிவியல் கண்காட்சி ரயில் 29ஆ‌ம ் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வருகிறது. இ‌ந் த க‌ண்கா‌ட்‌ச ி ர‌யில ை மாணவர்கள் இலவசமாக பார்க்கலாம்.

இது குறித்து தேசிய அறிவியல் தொழில்நுட்ப கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் ராமலிங்கம் சென்னையில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப கழகம், ஜெர்மன் நிறுவனத்துடன் இணைந்து அறிவியல் கண்காட்சி ரயிலை அமைத்துள்ளது. இந்த ரயில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், 215 நாட்கள் இந்தியாவில் 52 நகரங்களை சுற்றி வருகின்றது. ஒவ்வொரு நகரங்களிலும் இந்த ரயிலை சுமார் 50 ஆயிரம் குழந்தைகள் கண்டுகளித்துள்ளனர்.

சுமார் 15 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றியுள்ள இந்த ரயில் 29ஆ‌ம ் தேதி சென்னை வருகிறது. சென்னை வரும் இந்த ரயில், எழும்பூர் ரயில் நிலையத்தின் 2-வது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த ரயிலை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் இலவசமாக பார்வையிடலாம். 13 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலின் அனைத்து பெட்டிகளும் குளிர் சாதன வசதி கொண்டது.

இந்த ரயிலில் இயற்பியல், வேதியியல், உயிரியல், வானவியல், நானோ தொழில் நுட்பம், உயிரி தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல் சம்மந்தமான விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்களுக்கு ரயிலில் இருக்கும் 47 அறிவியல் அறிஞர்கள் செயல்முறையுடன் விளக்கம் அளிப்பார்கள். சென்னையில் இந்த ரயில் மார்ச் மாதம் 4ஆ‌ம ் தேதி வரை நிற்கிறது.

இந்த அறிவியல் கண்காட்சி ரயிலை காண வருமாறு சென்னை, காஞ ்‌ சிபுரம், வேலூர், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து மாணவர்கள் வந்து செல்ல சில தனியார் அமைப்புகள் வாகன உதவி செய்கின்றனர்.

கோவையில் இந்த அறிவியல் கண்காட்சி ரயில் மார்ச் 11ஆ‌‌ம ் தேதி முதல் 14ஆ‌ம ் தேதி வரை நிற்கிறது. கோவை ரயில் நிலையத்தில் நிற்கும் இந்த ரயிலை கண்டுகளிக்க கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம் மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு இந்த ரயில் கன்னியாகுமரி புறப்பட்டு செல்கிறது. கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இந்த ரயில் மார்ச் 20ஆ‌ம ் தேதி முதல் 22‌ஆ‌ம ் தேதி வரை நிற்கிறது. இந்த ரயிலை காண கன்னியாகுமரி, விருதுநகர், திருநெல்வேலி, மதுரை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி-கல்லூரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது எ‌ன்ற ு அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments