Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சு‌ற்றுலா மே‌ம்பா‌ட்டு ப‌ணி‌க்கு தமிழக அரசு‌க்கு தேசிய விருதுகள்!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (10:49 IST)
தமிழக அரசின் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அந்த விருதுகள் 27ஆ‌ம ் தேதி டெல்லியில் வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில ், ஊரகச் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் செட்டிநாடு பகுதியில் சுற்றுலா மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் விவரங்களையும், சிறந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்ற அடிப்படையில் காஞ ்‌ சிபுரம் மாவட்டம், தண்டரை கிராமத்தில் உள்ள இருளர் பழங்குடி மகளிர் நல சங்கம், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஆற்றியுள்ள பணிகள் பற்றிய விவரங்களையும் 2006-07-ம் ஆண்டின் தேசிய விருதுகளுக்கான முன்மொழிவுகளாக மத்திய அரசுக்குத் தமிழக அரசு அனுப்பி வைத்தது.

அவற்றை ஆய்வு செய்த மத்திய அரசு சிறந்த ஊரகச் சுற்றுலாத் திட்டத்திற்காகத் தமிழகத்திற்கு ஒரு தேசிய விருதும், தலைசிறந்த தன்னார்வத் தொண்டு நிறுவனமான தண்டரை இருளர் பழங்குடி மகளிர் நல சங்கத்திற்கு மற்றொரு தேசிய விருதும் ஆக இரண்டு தேசிய விருதுகளைத் தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.

இந்த விருதுகள் புதுடெல்லியில் விக்யான் பவனில் ‌‌பி‌ப்ரவ‌ர ி 27 ஆ‌ம ் தேதி நடைபெற உள்ள விழாவில் வழங்கப்படவுள்ளன என்று தமிழக அரசு அறிவித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments