108 திவ்ய தேசங்களில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோயிலும் ஒன்றாகும்.
இந்த கோயிலுக்கு பல பெரும் சிறப்புகள் உள்ளன. பிருந்தாரண்ய ஸ்தலம் என்றும், பஞ்ச வீரத்தலம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்ரேயரால் வணங்கப்பட்ட திருத்தலமாகும்.
இந்த கோயில் தீர்த்தத்தின் பெயர் கைரவினி சரஸ் என்பதாகும். இந்த திருக்குளத்தில் அல்லி பூக்கள் அதிகமாக காணப்பட்டதால் அல்லிக்கேணி என்ற பெயரும் ஏற்பட்டது.
கோயிலின ் சிறப்பு
இத்திருத்தலத்தில ் பிருகு முனிவர், மார்க்கண்டேயர், மதுமான் மகரிஷி, சப்தரோம அத்ரி மகரிஷி, ஜாபாலி மகரிஷி, தொண்டைமான் சுமதி மன்னன் என பலருக்கு இறைவன் காட்சி கொடுத்திருக்கிறார். திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும ்.
ஐப்பசி மாத திருமூல நன்னாளில் நடைபெறும் கைத்தல சேவை சிறப்பு வாய்ந்தது. உரியடி திருவிழா, இராப்பத்து, பகல்பத்து திருவிழாக்கள் சிறப்புடையவை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இந்த கோயிலில் சிறப்பாக வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
வழிபாட்டு நேரம்
தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். தமிழ க அரசின ் அன்னதானத ் திட்டமும ் செயல்படுத்தப்பட்ட ு வருகிறத ு.