மேலும் விஷ்வக்சேனா, ராமர், கிருஷ்ணர், நாச்சியார், சக்கரத்தாழ்வார், கருடர், ஹனுமான், ஆண்டாள் ஆகியோருக்கென தனித்தனி சன்னிதானங்களும் இக்கோயிலில் உள்ளன.
156 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் 7 திருவீதிகளைக் கொண்டது. அதிலும் 7 திருவீதிகளும் ஒரே அமைப்பில் காட்சியளிக்கும். முதன் முறையாக செல்பவர்கள் அல்ல.. பல முறை சென்றவர்கள் கூட இந்த 7 திருவீதிகளில் குழம்பித்தான் போவார்கள்.
இக்கோயிலில் அமைந்திருக்கும் தூண்களையும், அதில் உள்ள சிற்பங்களையும் கண்டு ரசிக்கலாம்.
காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் நடுவே அமைந்துள்ள இந்த அழகிய ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதரைக் காண கண் கோடி வேண்டும்.
காலை 6.15 மணிக்குத் துவங்கும் சேவை இரவு 11 மணி வரை நடைபெறுகிறது. ஆனால் அவ்வப்போது இறைவனுக்கு பூஜைகள் நடைபெறும் நேரங்களில் மட்டும் சேவை நிறுத்தப்பட்டு பின்னர் பக்தர்கள் இறைவனை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறது.