Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாந்தோம் பேராலயம்

Webdunia
சென்னையின ், வங்க கடலின் வாலிப அலைகள ், கரைகளில் நுரையாக ி, மீண்டும் அலைகளாக மாறும் உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை பகுதியை ஒட்டி கம்பீரமாய் காட்சி தருவது தான் சாந்தோம் பேராலயம். சாந்தோம் என்ற சொல்லாட்சியே (புனித தோமா) இதன் வரலாற்றை முன்னிலைப்படுத்துகிறது.

இயேசு பெருமான ், நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் என் சீடராக்குங்கள ்; தந்தையின் இறுதிக் கட்டள ை, இதயத்தில் ஏற்றுக் கொண்டது போல ், இயேசுவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் கி.பி. 52ல் இந்தியாவின் சிறிய மாநிலங்களில் ஒன்றான கேரள மாநிலத்தின் மலபார் கடற்கரையிலுள்ள கிரேங்கனூர் துறைமுகத்தில் காலடி எடுத்து வைத்தார். அவருடன் அவரது நண்பரும ், வர்த்தகருமான ஹப்பான் என்வரும் இந்தியா வந்தார். புனித தோமா மலபார் கடற்கரையோப் பகுதிகளில் சுமார் ஏழு இடங்களில் ஆலயம் எழுப்பி மக்களை கிறிஸ்துவ மதத்திற்கு கொண்டு வந்தார். அவரது போதனை நூற்று கணக்கான மக்களை சத்திய வேதத்திற்கு கொண்டு வந்தது.

அதன்பின் மலபார் கடற்கரையிலிருந்து மயிலைப்புரம் என்று அழைக்கப்பட்ட இன்றைய மயிலாப்பூரான பழைய சென்னை கடற்கரை பகுதிக்கு வந்து சேர்ந்தார். அப்போது அப்பகுதியை ஆண்டு வந்த மன்னரின் பெயர் இராஜா மகாதேவன். அரசன் தோமையாரை வரவேற்றான் மன்னனின் ஆதரவுடன் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு தனது போதனைகளை தொடங்கினார். புனிதரின் போதனையையும ், புதுமையையும் கண்டு பெரும் தொகையினை மக்கள் அவர் பின்னால் போவதையும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவதையும் கண்டு மன்னன் இராஜா மகாதேவனும் அவனது ஆட்களும் புனிதத் தோமையாரை தீர்த்துக் கட்ட முடிவெடுத்தனர். மன்னனும் அவனது ஆட்களும் வேவு பார்ப்பதை கண்ட புனித தோமா சைதாப் பேட்டைக்கு அருகிலுள்ள சின்ன மலைக் குகையில் மறைவாகத் தங்கிக் கொண்டு மக்கள் மத்தியில் வேதம் போதிக்க மட்டும் வெளியில் வந்தார். புனித தோமையார் சின்னமலை குறையில் தான் இருக்கிறார் எனத் தெரிந்து மன்னரின் ஆட்கள் மலைக்குள் நுழை ய, மன்னரின் ஆட்களில் ஒருவன் ஈட்டியால் புனித தோமாவின் முதுகில் குத் த, அவர் உயிர் துறந்தார்.

கி.பி. 72ல் வேதசாட்சியாக மரணமடைந்த புனிதத் தோமையரின் திருவுடல் மயிலாப்பூர் கடற்கரையில் அவரே கட்டிய ஆலயத்தில் புதைக்கப்பட்டது. புனித தோமையார் புதைக்கப்பட்ட இடத்தில் வானுயர எழுந்த பேராலயம்தான் புனித சாந்தோம் பேராலயம்.

பேராலயம் பற்றிய வரலாற்றுச் சுவடுகள் :

* சீனப் பயண யாத்ரீகர் : மார்கோ போலோ தனது சுற்றுப் பயணத்தின் போது இப்பேராலயத்தை தரிசித்து கோமாவின் கல்லறையை கண்டதாகவும ், புனிதத் தோமையார் மலையில் நெஸ்தூரியர்களின் துறவு மடம் இருந்ததாகவும் தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

* புனித தோமையார் பேரலாயத்தில் மக்கள் அனைவராலும் வணங்கப்படும் புனித மயிலை அன்னையின் திருச்சூருபம் (சிலை) பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. புனித பிரான்சிற்கு சவேரியார் தூர கிழக்கு நாடுகளுக்கு நற்செய்தி பணியாற்ற தனது பயணத்தை துவங்கும் முன்பு 1545 ல் புனித மயிலை அன்னை திருச்சிலைக்கு முன் நின்று செபித்தார் என்று வரலாறு கூறுகிறது.

* மறைந்த போப்பாண்டவர் இரண்டாம் அருள் சின்னப்பார் (ஞடியீந துட ிhn ஞயரட-ஐஐ) 1986 ஆம் ஆண்டு 5ம் நாள் இப்பேரலாயத்திற்கு வந்து புனித கல்லறையில் செபித்தார்.

சாந்தோம் பேராலயத்தின் சிறப்பம்சங்கள் :

உலகிலேயே இயேசுவின் பன்னிரெண்டு சீடர்களில் இரண்டு சீடர்களுக்கு மட்டும் தான் அவர்கள் புதையுண்ட கல்லறைகளின் மீது ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று ரோமபுரியிலுள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் தலைவரும ், திருத்தந்தையுமான புனித இராயப்பரின் கல்லறை. இரண்டாவது சென்னை மயிலாப்பூரிலுள்ள புனித தோமாவின் கல்லறை.

இவ்வாலயம் புனிதத் தோமையாரே மயிலாப்பூரில் வாழ்ந்த போது கட்டிய சிற்றாலயம ், அதற்குப்பின் அவ்விடத்லேயே கட்டப்பட்ட ஆலயங்கள் காலத்தின் ஓட்டத்தில் கடல் அரிப்பினாலும ், தட்பவெப்ப சூழ்நிலை மாற்றங்களினாலும் கி.பி. 17ம ், 18 ம் நூற்றாண்டுகளில் வரலாற்றில் ஏற்பட்ட படையெடுப்புகளாலும் ஆலயம் சீரழிந்த நிலையை கண்ட போர்சுக்கீசியர்கள் இதனை மீண்டும் கட்டியெழுப்ப எண்ண ி, அன்றைய ஆயராக பணியாற்றிய மேன்மைமிகு டாம் ஹென்ரிக் ஜோஸ் டிசில்வா அவர்களை அணு க, அவர் புனித தோமையாரின் கல்லறை ஆலயத்தில ், அதன் மையத்தில் அமையுமாறு புதிய பேராலயத்தை கட்டி முடித்தார்.

1896 ஆம் ஆண்டு மே மாதம் 10ம் நாளில் மேன்மை மிகு டாம் ஏ.எஸ். வலன்டீன் அவர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

1956 ம் ஆண்டு மார்ச் திங்கள் 15ம் நாள் திருத்தந்தை (போப்பாண்டவர்) பன்னிரெண்டாம் பத்திநாதர் அவர்களால் இப்பேராலயம் பசிலிக்காவாக (பசிலிக்கா என்றால் மாளிகை என்பது பொருள்) அறிவிக்கப்பட்டது.

தற்போது இப்பேராலயமானது கடற்காற்றாலும ், புயற்காற்றாலும் சென்னையில் பெருகிவரும் வாகன நெரிசல் மற்றும் சுற்றுச் சூழல் மாசினால் சிறிது சிறிதாகச் சிதைந்து கொண்டே வ ர, தற்போதைய பேராலய பங்குத்தந்தை அருட்திரு. லாரன்ஸ் ராஜ் (சுநஎ. குச. டுயறச ந nஉந சுயத) இப்பேராலயத்தை சீரமைக்க கடந்த ஆண்டு முயற்சி மேற்கொண்டார்.

விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்து பிரசித்திப் பெற்ற கட்டடங்கள ை, கலைக்கூடங்கள ை, ஆலயங்களை புதுப்பிப்பதில் வல்லவர்களான குண்டுராங் குழு நிறுவனம் மற்றும் லார்சன் டியுப்ரோ நிறுவனம் இப்பேராலயப் புதுப்பிக்கும் பணியை எடுத்துச் செய்ய முடிவு செய்யப்பட்டது. கச்சிதமாக கடுகளவு கூட பேராலயத்தின் அமைப்புகள் பொலிவு குன்றாமல் அதில் காணப்பட்ட அத்தனை வேலைப்பாடுகளுக்கும் மேலும் மெருகூட்டி 2004ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி புதுப்பிக்கப்பட்ட அதனை (2004ம் ஆண்டு) போப்பாண்டவரின் இந்தியப் பிரதிநிதி குயின்டானோ அர்சித்தார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments