பிரார்த்தனை தலமாக திகழும் சோளிங்கர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்!

Webdunia
வைணவத் திவ்ய தேசங்கள் 108ல் குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்வது சோளிங்கபுரம் அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மசுவாமி திருக்கோயில். இத்தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு உறையும் எம்பெருமானை ஆழ்வார்கள் மூவர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

சோளிங்கபுரத்தின் புராணப் பெயர் கடிகாசலம். இவ்விடத்தை ஆழ்வார்கள் திருக்கடிகை என அழைத்தனர் என்று அறியப்படுகிறது. ஆச்சாரியார்கள் சோளசிம்மபுரம் என்றும ், சைவர்கள் சோழலிங்கபுரம் என்றும் அழைத்த ு, தற்போது சோளிங்கபுரம ், சோளிங்கர் என்று அழைக்ப்படுகிறது.

அமைவிடம் :

வேலூர் மாவட்டம் வாலாஜா வட்டம ், அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்தும ், திருத்தணி ரயில் நிலையத்திலிருந்தும் 27 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பது திருக்கடிகை என்னும் சோளிங்கபுரம்.

தனிப்பெரும் சன்னதிகள் :

சோளிங்கரில் உள்ள அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மசுவாமி திருக்கோயில் மூன்று தனிப்பெரும் சன்னதிகளை கொண்டு விளங்குகிறது.

1. திருமலை (பெரியமலை) : அருள்மிகு அமிர்தபலவல்லித் தாயார் உடனுறை அருள்மிகு யோக நரசிம்மசுவாமி எழுந்தருளியுள்ள மலைக்கோயில்.

2. சிறிய மலை (கடிகாசலம்) : அருள்மிகு யோக ஆஞ்சநேயசுவாம ி, ஸ்ரீ ராமர ், ஸ்ரீ ரங்கநாதர் ஆகிய எம்பெருமான்கள் எழுந்தருளியுள்ள மலைக்கோயில். மேற்படி இரண்டு மலைக்கோயில்களும் நகரிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் கொண்டபாளையம் என்ற சிற்றூரில் அமையப் பெற்றுள்ளது.

3. ஊர் திருக்கோயில் : அருள்மிகு பக்தோசித பெருமாள ், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் ஆகிய எம்பெருமான்கள் ஊரிலேயே எழுந்தருளியுள்ளனர். இக்கோயில் சோளிங்கர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. உற்சவருக்கென்று (அருள்மிகு பக்தோசிதசுவாமி) தனிக்கோயில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இங்குதான் முக்கிய திருவிழாக்கள ், பிரம்மோற்சவம ், தேர்த் திருவிழா ஆகியன நடைபெறுகிறது.

தலச் சிறப்பு :

இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும ், தொண்டை நாட்டு வைணவ திருப்பதிகள் 22-ல் ஒன்றாகவும ், பிரார்த்தனை திருத்தலமாகவும் விளங்கி வருகிறது. ஸ்ரீ நம்மாழ்வார ், திருமங்கையாழ்வார ், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. ஏழு மாமுனிவர்களான வாமதேவர ், வசிஷ் ட, கத்யபர ், அத்திர ி, ஜமதக்ன ி, கௌதமர ், பரத்துவாஜர் ஆகியோர் சிங்கப் பெருமானை சாந்த வடிவில் தரிசிக்க விரும்பி இறைவனைத் தொழ எம்பெருமான ், ஸ்ரீ யோக நரசிம்மசுவாம ி, முனிவர்கள் நினைத்த மாத்திரத்தில் ஒரு கடிகை (நொடிப்பொழுது) நேரம் அவர்களுக்கு திருமலையில் காட்சி அருளியதால் இத்தலம் கடிகாசலம் என பெயர் பெற்றதாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீமன் நாராயணன் எடுத்த அவதாரங்களில் ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிங்க அவதாரமாகும்.

பெற்ற தகப்பனே பகையாய் பிறர் எவரும் எவ்வகையிலும் உதவிட முடியாத நிலையில ், பள்ளியில் படித்து வந்த சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க தன்னை அண்டியவர்க்காக நரசிங்கமாய் அவதரித்து உதவியவனின் மேன்மையும் நேர்மையுமே அடியவர்க்குப் பெரும் பலமாகும். அத்தகைய தெள்ளிய சிங்கமாகிய தேவனே யோக நரசிங்கனாய் திருக்கோயில் கொண்டுள்ளான் திருக்கடிகை மலையில்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments