webdunia photoWD மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சற்றேறக்குறைய 6,500 முதல் 7,000 அடி உயரத்தில் அமைந்துள்ள மிக அழகான கோடை தங்கு தலம். சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மிகவும் அறிந்த அழகிய நிலமகள். ஆனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகளால் கோடைக்காலங்களில் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது கொடைக்கானல். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அளவிற்கு வசதிகள் அதிகரிக்கப்படாத நிலை. ஆயினும் கோகஸ் வாக் (7,300 அடி), பிரையன்ஸ் பூங்கா, செட்டியார் பூங்கா,...