Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவலன்

காவலன்
, சனி, 22 ஜனவரி 2011 (17:46 IST)
அதிகார எதிர்ப்பு மற்றும் ஈழததமிழர்களின் எதிர்ப்பு ஆகியவற்றுக்கு நடுவில் வெளிவந்திருக்கிறது காவலன். காதை அடைக்கும் பன்ச் சவடால், கர்ண கொடூர வில்லன் சவால் இந்த இரண்டும் இல்லாததற்காகவே காவலன் சிறந்த படம் என்று சொல்கிறவர்களை வெள்ளாவியில்தான் வெளுக்க வேண்டும்.
WD

தான் அபிமானம் வைத்திருக்கும் ரா‌ஜ்கிரணின் மகளுக்கே பாடிகாடாகப் போகிறார் விஜய். அவரது குளோசப் ஃபாலோ அப்பை விரும்பாத ரா‌ஜ்கிரணின் மகள் அசின், செல்ஃபோன் மூலமாக விஜய்யை காதலிப்பதாகச் சொல்கிறார். சொல்ஃபோன் பெண் யார் என்பது தெ‌ரியாமலே காதலில் கசிந்துருகிறார் விஜய். விஷயம் ரா‌ஜ்கிரணுக்கு தெ‌ரிய... நம்பினால் நம்புங்கள், கடைசி ஐந்து நிமிடம் மட்டும் பலரும் எதிர்பார்க்காத திருப்பம்.

ஆக்ரோஷம் முதல் வெட்கம் வரை எல்லாமே இதற்கு முன்னால் வந்த விஜய் படங்களில் பார்த்ததுதான். டான்சும்கூட அதேதான். இதில் விஜய்யை குறிப்பிட்டுப் பாராட்ட எதுவுமில்லை. குளோசப்பில் பே‌ரிளம் பெண்ணாக தெ‌ரிகிறார் அசின். ஃபோனில் அவர் செய்யும் அக்குறும்பு போகப் போக போரடிக்கிறது.

ரா‌ஜ்கிரணும், ரோஜாவும் ஆஜர் வைப்பதோடு ச‌ரி. படத்தின் முக்கியமான முதன்மையான பலம் என்றால் வடிவேலு. கன்ஃபூஸ் ஆயிட்டாரு டயலாக்கை வைத்தே ராவடி செய்கிறார். வயிறு வலிக்கிறது, சி‌ரிப்பில்.

சுமாரான கதை, சுமாரான திரைக்கதை... இதனை வைத்து சுமாரான படத்தை தந்ததே சித்திக்கின் சாமர்த்தியம்தான். வித்யாசாகர் விடுப்பில் சென்றுவிட்டதைப் போல் பாடலிலும் பின்னணி இசையிலும் ஒருவித சோர்வு.

காவலன் - விஜய்யின் ரசிகர்கள் மட்டும் சுறாவைவிட சிறப்பா இருக்கு என திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil