Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அச்சமுண்டு அச்சமுண்டு

அச்சமுண்டு அச்சமுண்டு
, புதன், 22 ஜூலை 2009 (13:31 IST)
பேச்சில் மட்டுமே வெளிப்படும் இந்திய கலாச்சாரத்துக்குப் பயந்து சினிமாக்காரர்கள் விலகிச் செல்லும் பிரச்சனைகளில் ஒன்றை அலசுகிறது அறிமுக இயக்குனர் அருண் வைத்தியநாதனின் அச்சமுண்டு அச்சமுண்டு.

முழுக்க அமெ‌ரிக்காவில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் ஆவி பேய் கதையல்ல. குலை நடுங்க வைக்கும் க்ரைம் கதையுமல்ல. ஆனால், அச்சத்தில் பல நேரம் நம் முதுகு ஐஸ்கட்டியாக சில்லிடுகிறது.

webdunia photoWD
பிரசன்னாவும், சினேகாவும் அமெ‌ரிக்காவில் தங்களது எட்டு வயது மகளுடன் தனியாக வசிக்கிறார்கள். பிரசன்னா சாஃப்ட்வேர் இன்‌‌ஜினியர். வெண்ணையாக வழுக்கிச் செல்லும் வாழ்க்கையில் வெங்காயத்தை நசுக்கிவிட்ட மாதி‌ி சில சம்பவங்கள் நடக்கின்றன.

தங்களது வீட்டை யாரோ கண்காணிப்பது போலவும், மகளை யாரோ கடத்த முயல்வது போலவும் சினேகாவுக்கு தோன்றுகிறது. முதலில், தனிமையின் பயம் என அதை ஒதுக்கும் பிரசன்னா, முகமூடி அணிந்த உருத்தைப் பார்த்ததும் சினேகாவின் பயத்தில் தானும் பங்கு போட்டுக் கொள்கிறார்.

அந்த மர்ம நபர் யார்? எதற்காக அவன் வீட்டை நோட்டம் போடுகிறான்? பிரசன்னா விடைகளை கண்டுபிடிக்கும் போது அவருடன் நாமும் அதிர்ந்து போகிறோம்.

உலகம் முழுவதும் உள்ள, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலை படமாக்கியிருப்பதற்காக இயக்குனருக்கு முதல் பாராட்டு. இளம் இந்திய தம்பதிகளின் வாழ்க்கையை, ரொமான்ஸை, அவர்களின் சின்னச் சின்ன உரசல்களை அவர்களுக்கே தெ‌ரியாமல் படம் பிடித்தது போன்ற மேக்கிங் படத்தின் ஆரோக்கியமான அம்சம்.

பிரசன்னாவும், சினேகாவும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஹீரோ, ஹீரோயின் கெமிஸ்ட்‌ி என்பார்களே, பிரசன்னா, சினேகா காட்சிகள் அதற்கு சிறந்த உதாரணம்.

பெயின்டராக வரும் ஜான் ஷா நல்ல தேர்வு. வீக்னஸை கட்டுப்படுத்த முடியாமல் அவர் காட்டுக் கூச்சல் போடுகையில் நமக்கு வியர்க்கிறது. பயத்தை மீட்டுவதில் பெரும் பங்கு வகிக்கிறது கார்த்திக் ராஜாவின் வயலின். அவர் இசைக்காமல் விட்ட மவுனங்களையும் ரசிக்க முடிகிறது.

ரெட் ஒன் கேமராவில் காட்சிகள் கண்ணை கவர்கின்றன. மெதுவாக நகரும் படத்தின் யதார்த்தமே பல நேரம் படத்துக்கு வில்லனாகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் சொல்ல வந்த விஷயத்தில் மேலும் சுவாரஸியம் கூடியிருக்கும்.

சினிமா என்றால் இரண்டரை மணி நேரம் ஓட வேண்டும் என்பதையும் துணிச்சலாக உடைத்திருக்கிறார் இயக்குனர். ஒன்றரை மணி நேரப் படத்தில் பாடல்கள் இரண்டும் துருத்தி நிற்கின்றன. துணிந்து கத்தி‌ி போட்டிருக்கலாம்.

அச்சமுண்டு அச்சமுண்டு - குறைகள் இருந்தாலும் குறைத்து மதிப்பிட முடியாத படம்.

Share this Story:

Follow Webdunia tamil