Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாமனன்

Webdunia
சனி, 18 ஜூலை 2009 (13:30 IST)
சுப்பிரமணியபுரம் வெற்றிக்குப் பிறகு ஜெய் நடித்திருக்கும் படம். ச ூப்பர் ஹீரோவாக பன்ச் டயலாக் பேசி எத ி‌ ரிகளையும், நம்மையும் வதம் பண்ணாமல் யதார்த்தமாக வந்து போவதற்கு முதலில் சபாஷ்.

webdunia photoWD
இரண்டு ட ிராக்காக பயணிக்கிறது கதை. ஜெய்க்கு சினிமாவில் ஹீரோவாகும் ஆசை. ஊ‌ ரிலிருந்து கிளம்பி வந்து நண்பன் சந்தானத்தின் அறையில் தங்கி சென்னையில் வாய்ப்பு தேடுகிறார். ஊ‌ ரிலிருந்து கிளம்பி வரும் ஹீரோவுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காகவே சென்னையில் ஒரு காமெடி நண்பர் இருப்பது இந்தப் படத்திலும் ‌ரிப்பீட்.

ஜெய் நடிக்க வாய்ப்பு கேட்டு போகும் இடங்கள் வாய்ப்பு தேடுகிறவர்களுக்கு பாடசாலை. திட்டு வாங்கிக் கொண்டு அதை சமாளிக்கும் இடத்தில் ஜெய் ' 'ஜெய ்' க்கிறார்.

ப ்‌ ரியாவை பார்த்ததும் காதல் வருவதும், மோதலில் தொடங்கும் காதல் பிறகு கூடலில் முடிவதும் பழம் பஞ்சாங்க எபிசோட். ப ்‌ ரியாவின் அம்மா ஊர்வசியை சமையல் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு நடத்துவதாக கூறி ஜெய்யும், சந்தானமும் கலாய்க்கும் இடத்தில் வயிறு புண்ணாகிறது. ஊர்வசியின் நடிப்புக்கு நகைச்சுவை மாமணி பட்டமே தரலாம்.

காதலும் கலாட்டாவுமாக செல்லும் கதையில் க்ரைமை சேர்க்கிறது லட்சுமிராயின் மரணம். மாடலாக வந்து சொற்ப நேரத்திலேயே உயிரை விடுகிறார் லட்சுமிராய். அவரது கொலைப்பழி ஜெய் மீது விழ, பரமபத ஆட்டம் தொடங்குகிறது.

வாய்ப்பு தேடும் இளைஞனாக யதார்த்தத்தை மீறாமல் நடித்திருக்கிறார் ஜெய். ப ்‌ ரியாவுக்கு அதிக வேலையில்லை. கவர்ச்சியுடன் முடிந்து போகிறது லட்சுமிராயின் அத்தியாயம். ஆச் ச‌ர ியம் என்றால் அது சந்தானம். இரட்டை அர்த்த வசனம் இல்லாமலே காமெடியில் கலக்குகிறார்.

அரசியல் சண்டையில் டெல்லி கணேஷை தீர்த்து கட்டும் சம்பத், அவருக்கு உதவி செய்யும் போலீஸ் அதிக ா‌ ர ி தலைவாசல் விஜய், எதிர்பாராத வில்லன் ரகுமான் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

போலீசிடமிருந்து தப்பித்து ரகுமானிடம் அடைக்கலமாகும் ஜெய்யிடம், நான்தான் லட்சுமிராயை கொலை செய்தேன் என ரகுமான் கூறும்போது ச ூடு பிடிக்கிறது திரைக்கதை.

தமிழ்ப்பட கிளைமாக்சில் வரும் கட்டி முடிக்கப்படாத பில்டிங்கில்தான் இந்தப் படத்தின் கிளைமாக்சும். ரகுமானும்., ஜெய்யும் மோதும் காட்சியை ஆக்ரோஷத்துடன் எடுத்த அதே நேரம் புத்திசாலித்தனமாக மோதலை முடித்ததற்கு இயக்குனரை பாராட்டலாம்.

யுவனின் இசை படத்தின் ப்ளஸ். அதிலும் ஏதோ செய்கிறாய் பாடல் தாலாட்டுகிறது. படத்தின் குவாலிட்டியை உயர்த்தியிருக்கிறது அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. பழக்கமான கதையை ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள். ஒருமுறை பார்க்கலாம்.

வாழு.. வாழவிடு.. நயன் தாராவை அடுத்து விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு...!

தனுஷ் மீது நயன்தாரா குற்றச்சாட்டு.. கீழ்த்தரமான செயல் என விமர்சனம்..!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோ ஆல்பம்!

ஊதா கலரு உடையில் ஜொலிக்கும் க்ரீத்தி ஷெட்டி… ஸ்டன்னிங் போட்டோஸ்!

கங்குவா விமர்சனத்தால் மீண்டும் அமரன் படம் பார்க்க ஆர்வம் காட்டும் ரசிகர்கள்!

Show comments