Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெண்ணிலா கபடி குழு

Webdunia
நாலு பைட், ஆறு பாடல் படங்களிலிருந்து மாறுபட்டது அறிமுக இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா கபட ி குழு. கபடி விளையாட்டின் பின்னணியில் கிராமத்து இளைஞனின் வலி மிகுந்த வாழ்க்கையை‌ச் சொல்கிறது படம்.

ஆவணப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும ், படமாக்கியிருக்கும் விதம், கேமரா வெளிச்சம் படாத மனிதர்கள், யதார்த்தமான கிராமத்து ச ூழல் ஆகியவை சுசீந்திரனை நம்பிக்கை தரும் படைப்பாளிகள் பட்டியலில் சேர்கிறது. கமர்ஷியல் சினிமாவில் தென்படும் திருப்பங்கள், நாயகன் இருக்கும் அணி தொடர்ச்சியாக வெற்றி பெறுவது ஆகியவை படத்தின் தப்பாட்டங்கள்.
webdunia photoWD

ம ா‌ ர ி என்ற சிறுவனின் கபடி மீதான ஆர்வத்திலிருந்து தொடங்குகிறது படம். இளைஞனான பிறகும் ம ா‌ ரிக்கும் அவனது நண்பர்களுக்கும் கபடி மீதான ஆர்வம் குறையவில்லை. எந்தப் போட்டியிலும் ஜெயிக்காத இந்த அணிக்கு, மாநில அளவில் நடக்கும் போட்டியில் அதிர்ஷ்டவசமாக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அனுபவமுள்ள கோச்சின் (கிஷோர்) வழிகாட்டலில் ம ா‌ ர ி அணி கோப்பையை கைப்பற்றுகிறது.

இந்த கபடி கதையின் ஊடாக ம ா‌ ரியின் வாழ்க்கை சொல்லப்படுகிறது. படிப்பில் ஆர்வம் உண்டு ஆனால், படிக்க முடியாத நிலை. விளையாட்டில் ஆர்வம் உண்டு ஆனால், விளையாட முடியாத பண்ணை வேலை. காதலி விரும்பியும் அவளை கை பிடிக்க முடியாத துரதிர்ஷ்டம். வெற்றி கிடைத்தும் அதை ருசிக்க முடியாத நிலைமை... துரதிர்ஷ்டம் துரத்தும் ம ா‌ ரியின் முடிவு சோகத்தின் கண்ணீர் துளி.

திருவிழாவுக்கு கிராமத்துக்கு வரும் சரண்யா மோகன் கண்களாலேயே ம ா‌ ரியை (விஷ்ணு) காதலிக்கும் இடம் கவிதை. முற்றுப்பெறாத அவ‌ரின் காதல், கதையின் அழுத்தத்தை கூட்டுகிறது. படத்தை நகர்த்திச் செல்வது, ம ா‌ ரியின் நண்பர்களின் இயல்பான நகைச்சுவை.

மாநில அளவிலான போட்டியில் போட்டி நடக்கும்போதே அணியை மாற்றுவதும், வேறு அணி வீரரை மாற்று அணியில் ஆட வைப்பதும் சினிமாவில் மட்டுமே சாத்தியம். கபடி விளையாட்டை பிரதானமாகக் கொண்ட படத்தில் இந்த விதிமீறல்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை.

ப்ரேக் கழன்ற வண்டியாக ஒவ்வொரு காட்சியும் இழுத்துக் கொண்டே செல்வது சலிப்பு. எடிட் செய்திருக்கலாம். ம ா‌ ரியாக வரும் புதுமுகம் விஷ்ணு, கோச்சாக வரும் கிஷோர், சரண்யா மோகன், நண்பர்கள் அப்பு, சூ‌ ர ி, வைரவன், நிதிஷ் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் நிறைவான அம்சம் லஷ்மனின் ஒளிப்பதிவு. கபடி போட்டி நடக்கும் இரவு நேர ஒளிப்பதிவு பாராட்டுக்க ு‌ ரியது. கதையோடு இணைந்துவரும் பாடல்கள், பின்னணி இசை படத்தின் பலம்.

ம ா‌ ரியின் காதலை கபடி காட்சிகள் ஓவர்டேக் செய்து விடுவதால் படத்தின் இறுதி பத்து நிமிட கிளைமாக்ஸ் - அது படத்தின் முக்கியமான திருப்பமாக இருந்தபோதும் - ஒட்டாமல் தொக்கி நிற்கிறது.

வடிவேலு அண்ணே..! குரலை கேட்டதும் கண்ணீர் விட்ட வெங்கல் ராவ்! – நிதியுதவி செய்த வடிவேலு!

சென்னையில் ஒட்டப்பட்ட மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் இதுதான்..!

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ரத்தா?

தனுஷின் ‘ராயன்’ திரைப்படம்.. நான்கு கேரக்டர்கள் குறித்த தகவல்..!

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

Show comments