புராணத்தை, நிகழ்காலத்துடன் இணைத்து இயக்குனர் ராஜு ஈஸ்வரன் பிழிந்திருக்கும் நகைச்சுவை சாறு, பஞ்சாமிர்தம்.
webdunia photo
WD
ராமாயண காலத்திலிருந்து தொடங்குகிறது படம். ம ா ரிசனுக்கும், இடும்பனுக்கும் குருவின் மகள் மந்தாகினியின் மீது மோகம். மந்தாகினி யாருக்கு என்ற சண்டையில் இடும்பனை தண்டையாக்கி காலில் அணிந்து கொள்கிறான் ம ா ரிசன். பிறகு மாய மானாக ராமனுக்கு போக்கு காட்டி அவனது அம்பால் வீழ்த்தப்பட்டு பூமியில் பாறையாக ம ா ரிசன் மாறுவதுடன் புராண கதை நிறைவடைகிறது.
நிகழ்கால கதை ஊட்டியில் நடக்கிறது. பணக்காரரான நா ச ரின் உதவியாளர் சரண்யா மோகன். அவரது கெடுபிடி பிடிக்காமல் நாசரை சுற்றியுள்ளவர்கள் மலையிலிருந்து சரண்யா மோகனை கிழே தள்ளிவிடுகிறார்கள். சரண்யா மோகன் விழும் இடம் ம ா ரிசன் பாறை. சரண்யாவால் சாபவிமோசனம் பெறும் ம ா ரிசன், அவருக்கு உதவ முன்வருகிறார்.
இப்போது கதையில் எதிர்பாராத ட்டுவிஸ்ட். சரண்யா மீண்டும் நாசரை தேடி வரும்போது அங்கு இருப்பது நாசரைப் போல தோற்றம் கொண்ட வேறொரு நாசர். அவருக்கு உதவி செய்வது புராண காலத்தில் ம ா ரிசனால் தோற்கடிக்கப்பட்ட இடும்பன். இந்த காமெடி கலாட்டாவுக்கு நடுவில் நா ச ரின் பேத்திதான் சரண்யா மோகன் என்ற கிளைக் கதையும், சரண்யா மோகன், அரவிந்தன் காதலும் உண்டு.
புராணத்தையும், நிகழ்காலத்தையும் இணைத்ததில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சரண்யா மோகனின் துருதுரு நடிப்பும், நா ச ரின் லொள்ளும் படத்தின் ரசிக்க வைக்கும் விஷயங்கள். ம ா ரிசனாக ஜெயராமின் நடிப்பும், இடும்பனாக வரும் இயக்குனர் ராஜு ஈஸ்வரனுடன் அவர் மோதும் காட்சிகளும் குழந்தைகளை கவரும்.
கில்லராக வயிறு வலிக்க ச ி ரிக்க வைக்கிறார் கருணாஸ். எம்.எஸ். பாஸ்கர், மயில்சாமி, இளவரசு கூட்டணி சேரும் போதெல்லாம் ச ி ரிப்பலை வெடிக்கிறது. சுந்தர் சி பாபுவின் பாடல்கள் சுமார் ரகம். குழந்தைகளை மனதில் வைத்து கிராபிக்ஸை பயன்படுத்தியிருப்பதால் தரம் குறித்து இயக்குனர் அதிகம் அலட்டிக் கொள்ளாதது தெரிகிறது.