Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபியும் நானும்

Webdunia
மனித உறவுகளின் ஈரமான பக்கத்தை படமாக்கும் ராதாமோகனின் இன்னொரு முயற்சி, அபியும் நானும். இதில் அப்பா, மகள் உறவின் நுட்பமான பகுதிகளை காட்சிப்படுத்த முயன்றுள்ளார்.
webdunia photoWD

மகள் மீது அ‌ப‌ரிதமான பாசம் கொண்ட அப்பாவாக பிரகாஷ்ரா‌ஜ். மகளை முதல் நாள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அந்தப் ப ி‌ர ிவையே தாங்க முடியாமல் தவிப்பவர். மகள் வளர்ந்து தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கும்போது அதனை பிரகாஷ்ராஜால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

பிள்ளைகள் வளரும்போது கூடவே பெற்றோர்களும் தங்கள் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி படம் நிறைவடைகிறது.

பாசமிக்க அப்பா கதாபாத்திரத்தை தனது நடிப்பால் சிறப்பாக்கியிருக்கிறார் பிரகாஷ்ரா‌ஜ். மகள் படிக்கப் போன இடத்தில் சர்தார்‌ஜ ி இளைஞனை காதலிப்பது தெ‌ரிந்து உடைந்து போவதும், வீட்டிற்கு வரும் காதலனை மட்டம்தட்ட எடுக்கும் முயற்சிகளும், சபாஷ்ரா‌ஜ்.

மினி ஸ்கர்ட் இல்லாமலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் த ்‌ர ிஷ ா. வில்லியாகவே பார்த்துப் பழகிய ஐஸ்வர்யா பாந்தமான அம்மா கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்.

பிரகாஷ்ரா‌ஜ் கதை சொல்லும் விதமாக, இயல்பாக தொடங்கும் படத்தில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களையும் தனித் தனி குணாம்சங்களுடன் சித்த‌ரித்திருப்பது படத்தின் மீதான ஈர்ப்பை அதிக‌ரிக்கிறது.

பிச்சைக்காரனாக வந்து குடும்பத்தில் ஒருவராக மாறும் குமரவேல், பிரகாஷ்ர ா‌ ஜை கட்டி அணைத்து பாசத்தைப் பொழியும் குண்டு சர்தார்‌ஜ ி, பிரகாஷ்ர ாஜ ை கலாய்க்கும் குழந்தைகள் என ரசிக்க படத்தில் நிறைய உண்டு.

த ்‌ரிஷ ாவின் காதலனாக வரும் கணேஷ் நம்பிக்கையளிக்கும் அறிமுகம். படிப்படியாக அவரது கதாபாத்திரத்தின் இம ேஜ ை உயர்த்துவது, திரைக்கதையின் பலம்.

வித்யாசாக‌ரின் பின்னணி இசையும், ப ்‌ர ீத்தாவின் ஒளிப்பதிவும் படத்தின் சிறப்பம்சங்கள். ரசிக்க படத்தில் நிறைய இருந்தும், மொழியில் இருந்த மே‌ஜிக் இதில் மிஸ்‌ஸிங். பார்க்க வேண்டிய படம்.

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments