Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூ - விமர்சனம்

Webdunia
மினி ஸ்கர்ட்டில் நாயகனை மயக்காமல், வில்லனை உதைக்காமல் நாயகி படம் நெடுக வரும் தமிழ் திரைப்படம் இதுவாக‌த்தான் இருக்கும். சசிக்கு வந்தனம் அனந்த கோடி.

ம ா‌ ரிக்கு சின்ன வயது முதல் மாமன் தங்கராசு மீது ப ்‌ ரியம். வளர்ந்து மாமனை கட்டிக்கப் போறேன் என்று வாத்தியார்முன் சொல்லும் அளவுக்கு காதல். இன்‌ஜினிய‌ரிங் படிக்கச் செல்லும் மாமன் சந்தர்ப்பவசத்தால் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நேர்கிறது. திருமணம் ஆன பிறகு ம ா‌ ரியின் மாமன் மீதான காதல் என்னானது? நெஞ்சை பிழிய வைத்து ப ்‌ ரியாவிடை தருகிறார், சசி.
webdunia photoWD

அரும்பாகி மொட்டாகி பூவாகும் ம ா‌ ரியின் காதலை சரம்சரமாக தொடுத்திருக்கிறார் இயக்குனர். தங்கராசுவின் உயரத்தை கணக்கிட ஃபோர்மேனின் அருகில் நின்று ம ா‌ ர ி அளவெடுக்கும் காட்சியில் காதலின் கனம். கதாபாத்திரங்களுடன் வளர்ந்துவரும் அந்த ரெட்டை பனை மரம் காவிய சுவை. நுரைத்துப் பொங்கும் காதலுடன் ம ா‌ ரியாக வரும் பார்வதி மனதில் ப்ரேம் போட்டு தங்கிவிடுகிறார். கள்ளிப் பழம் கொடுக்க முடியாத விரக்தியில் அழுகிறாரே.. கனிந்த நடிப்பு.

ஹீரோயின் ஓ‌ ரியண்ட் கதையில் ஓரமாக நிற்க வேண்டிவரும் என்பது தெ‌ரிந்தே நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். மனைவி தன்னை திட்டுவது ம ா‌ ரிக்கு தெ‌ரிந்துவிடக் கூடாது என்று தவிக்கும் காட்சியில் கவனிக்க வைக்கிறார். கேமரா எதிர்பார்க்கும் குறைந்தபட்ச அழகியலையும் நிராக‌ரிக்கும் விதமாக பல நடிகர்களை அறிமுகப்படுத்திய சசியை எத்தனை பாராட்டினாலும் தகும்.

ம ா‌ ரியின் அம்மா, அண்ணன், தோழி, பேனாக்காரர், டீக்கடை அலோ, சின்ன வயது ம ா‌ ர ி... சின்னச்சின்ன கேரக்டர்களையும் சின்சியராக செதுக்கியிருக்கிறார்கள். கதையை சிதைக்காத அதே நேரம் கதையை உயர்ந்தபட்ச சாத்தியங்களுக்கு கொண்டு செல்கிறது கேமரா. செம்மண் பிராந்தியத்தை காட்டும் லாங் ஷாட்கள் அற்புதமானவை. ரெட்டை பனை மரங்களை ம ா‌ ர ி சுற்றிவரும் முதல் காட்சியில் பிரவாகித்துவரும் இசை மனதை நிறைக்கிறது.

அவன் (தங்கராசு) உனக்கு இல்லைனு ஆனபிறகும் அதே பாசத்தோடு உன்னால எப்படி இருக்க முடியுது? ம ா‌ ரியின் தோழி கேட்கும் இந்த கேள்விக்கான விடையை காட்சிகளாக்கியிருப்பதுதான் பூ-வின் ஆதாரம். ம ா‌ ரியின் எதிர்பார்ப்பில்லாத காதலின்முன் அனைத்துமே சிறுத்துவிடுகிறது.;

பூ-வில் சில நெருடல்கள். ஊருக்கே தெ‌ரியும் ம ா‌ ரியின் காதல் தங்கராசுவுக்கு மட்டும் தெ‌ரியாமல் போனது எப்படி? வாத்தியார் முன் துடுக்காக மாமனை கட்டிக்கப் போவதாக கூறும் ம ா‌ ர ி, தங்கராசுவிடம் காதலை சொல்ல தடுமாறுவது பருவம் தந்த வெட்கமா? இல்லை தயக்கமா?

தங்கராசுவின் அப்பா பெ‌ரிய இடத்து சம்பந்தத்துக்கு ஆசைபடுவதற்கும், ஸ்ரீகாந்த் சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிர்ப்பதற்கும் வைத்திருக்கும் காட்சிகள் தேவைதானா? அனைத்திற்கும் காரணம் சொல்ல திரைப்படம் என்பது நீதிமன்றம் இல்லையே.

தங்கராசுவை பார்க்க முடியாத வலி, ஏமாற்றம் ஆகியவற்றின் மூலமே ம ா‌ ரியின் காதலை சொல்லியிருப்பது படத்தை வழக்கமான பார்முலாவுக்குள் சிக்க வைக்கிறது.

தமிழில் வெளியாகும் அள்ளித் தெ‌‌ளித்த கோலங்களுக்கு நடுவே அழுத்தமாக கதை சொல்ல முயன்றிருக்கும் சசியின் பூ... குறிஞ்சி‌ப் ‘பூ‘.

மாடர்ன் ட்ரஸ்ஸில் எஸ்தர் அனிலின் ஸ்டன்னிங்கான போட்டோஷூட் ஆல்பம்!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை… விஜய் சேதுபதி அளித்த நறுக் பதில்!

இளையராஜா ஏன் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை?… அறநிலையத்துறை விளக்கம்!

கேம்சேஞ்சர் படத்தின் அடுத்த பாடல் வேற லெவல்ல இருக்குமாம்… இசையமைப்பாளர் தமன் கொடுத்த அப்டேட்!

Show comments