கள்ளன் போலீஸ் சேஸிங்குக்கு நடுவில் ஒரு காதல் கதை. இரண்டில் ஏதாவது ஒன்றில் ஜெயித்திருந்தாலும் படம் பிழைத்திருக்கும். ஆனால்...
குட்டி குட்டி திருட்டுகள் நடத்தும் திலக்கும், சேகரும் செய்யாத கொலை குற்றம் ஒன்றில் மாட்டுக ிற ார்கள். போலீஸ் விலங்கிடமிருந்து தப்பிக்க கொடைக்கானல் காட்டில் தஞ்சமடைக ிற ார்கள் இருவரும். இரண்டு ஆண்பிள்ளைகளை வைத்து காட்டுக்குள் என்ன பண்ணுவது? வருக ிற ார் கதாநாயகி பூர்ணா. நடிகையான அவருக்கு தாயும், முறைமாமனும்தான் வில்லன்கள். பணத்துக்காக பைனான்சியருக்கு பாய் வ ிர ிக்க விரும்பாமல் காட்டுக்குள் புகுந்து கொள்க ிற ார்.
webdunia photo
WD
அப்படி காடு ஏகிய திருடர்களை போலீஸும், நடிகையை தாய்மாமனும் தேடு தேடுயென தேடுக ிற ார்கள். இதனிட ையே, தனக்கு உதவி செய்யும் திலக் மீது பூர்ணாவுக்கு அது வந்துவிடுகிறது. ஆம், காதல். ஜோடி சேர்ந்த பின் நண்பன் எதற்கு? நண்பனுக்காக உயிர் துறக்க ிற ார் சேகர். காதலர்கள் ஒன்று சோந்தார்களா என்பது கிளைமாக்ஸ்.
புதுமுகங்கள் திலக்கும், சேகரும் கொடுத்த வேடத்தை கெடுக்காமல் நடித்திருக்க ிற ார்கள். ஆனால் மனதில் தங்க இது போதாதே. நடிப்பில் அவர்கள் போக வேண்டிய த ூரம் மிக அதிகம். பூர்ணாவின் நடிப்பில் பழுதில்லை. காதல் காட்சிகளில் ரசிக்க வைக்க ிற ார். குறத்தி மேக்கப்பில் அவரை உலவவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.