கர ிசல் காதலை பார்த்த தமிழ் சினிமாவுக்கு இந்த கான்வென்ட் காதல் புதுசு. இளமை பேனாவில் ஆங்கில மை ஊற்றி வசனங்களை எழுதியிருக்க ிற ார் இயக்குனர் கலாபிரபு.
ஹைடெக் இளைஞர் சாந்தனுக்கு இஷிதாவின் மீது காதல். இடையில் வரும் சாந்தனுவின் அத்தை மகள் வேதிகாவுக்கு சாந்தனு மீது காதல்.
webdunia photo
WD
இந்த முக்கோண குழப்படியில் சாந்தனு வேதிகாவை காதலிப்பதாக நினைத்து அவருடன் காய் விடுக ிற ார் இஷிதா. நண்பர்கள் குழப்பத்தை விளக்கி இஷிதாவுக்கு உண்மையை ப ுர ிய வைக்க ிற ார்கள். ஆனால் காதல் ஜே ாடி மீண்டும் ப ிர ிகிறது. அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.
இளமை துள்ளலுடன் சாந்தனு அட்டகாசமான அறிமுகம். ஒரே நேரத்தில் காதலியையும் வேறு பெண்ணையும் சமாளிக்கும் இடம் கைதட்டல். இஷிதா தன்னை புறக்கணிப்பதை ஜ ீரணிக்க முடியாமல் சாந்தனு புழுங்கும் போது பாக்யர ாஜ ின் மகனுக்கு நடிப்பும் பிரமாதமாக வருகிறது.
வீட்டை விட்டு அம்மா அமிதா கிளம்பும் போது மகனிடமும் அவனது நண்பர்களிடமும் நோ வீடியோ, நோ பேட் ஹேபிட்ஸ் என்று எச் சர ித்து விட்ட ுச ் செல்க ிற ார். இன்னொரு இடத்தில் மகள் தோழிகளுடன் காதலை பற்றி விவாதிக்கும் போது தாய் ந ாச ூக்காக விலகி செல்க ிற ார். காட்சிகளில் கவனம் செலுத்திய இயக்குனர் கதையிலும் அதை காண்பித்திருக்காலாமே என்று தோன்றுவது படத்தின் மைனஸ்.
இஷிதாவுக்கு இந்தி முகம். நடிக்க அதிக வேலையில்லாததால் தப்பித்தார், அவரும் நாமும். இன்னொரு நாயகி வேதிகா. காதலுக்காக உருகும் டிபிகல் தமிழ் நாயகி. கொடுத்த வேலையை செய்ததில் இஷிதாவை மிஞ்சுக ிற ார்.
நிழல்கள் ரவி, அமிதா, நண்பர்கள் என எல்லோருமே இன்றைய நா கர ிக உலகை பிதிபலிக்க ிற ார்கள். படத்தின் ர ியல் ஹீரோ ஏ.ஆர். ரஹ்மான். பாடல்களுக்கு திரையரங்கு அதிர்கிறது. டாக்ஸி டாக்ஸி பாடல் நீண்ட நாட்களுக்கு இளைஞர்களின் தேசிய கீதமாக இருக்கும். பின்னணி இசையை தனி இசைத்தட்டாக வெளியிடலாம். அமர்க்களம்.
பாடல்ளுக்கு பயன்படுத்தியிருக்கும் கிராபிக்ஸ் அதிகபடியான செலவு. ஆண்ட ்ர ூஸின் கேமரா ஜ ாலம் ப ுர ிந்திருக்கிறது. குறிப்பாக பாடல் காட்சிகள்.
அழுத்தமான கதை இல்லாதது சக்கரையின் இனிப்பை குறைக்கிறது.