Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாயகன் - விமர்சனம்!

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (20:04 IST)
பழைய சோறு எதிர்பார்த்தவனுக்கு பந்தி விரித்து பிரியாணி விளம்பினால் எப்படி இருக்கும்? அப்படியொரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி, நாயகன்!

கடத்தல் கும்பலுக்கும், கடமை தவறாத போலீஸ் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் சடுகுடுதான் கதை. விஜயகுமார் ரெட்டியின் திரைக்கதையில் றெக்கை கட்டி பறக்கின்றன காட்சிகள்.

WD
ஜே.ஜே. ரித்தீஷ் நேர்மையான போலீஸ் அதிகாரி. டி.ஜி.பி.யின் வளர்ப்பு மகன். நகரில் நடக்கும் இளம்பெண்கள் கடத்தல், போதை நடமாட்டம் இரண்டையும் வேரறுக்க சபதமேற்கிறார்.

இன்னொருபுறம் மண மேடையிலிருந்து தனது காதலியைக் கடத்திக்கொண்டு ஓடி வருகிறார் ரமணா. பின்னாலேயே காதலி கீர்த்தி சாவ்லாவின் அப்பா மற்றும் அடியாட்கள். துரத்தலின் இடையே வருகிறது ஒரு தொலைபேசி அழைப்பு.

அதில் பேசும் டாக்டர் சந்தியா (சங்கீதா) என்பவர், சிலர் தன்னைக் கடத்தி வைத்திருப்பதாகவும் உடைந்த போனில் பேசுவதால் லைனை கட் பண்ணவோ, வேறொருவருக்கு போன் பண்ணவோ முடியாது, எப்படியாவது தன்னை காப்பாற்றும்படி கெஞ்சுகிறார்.

ஜே.கே. ரித்தீஷூக்கு தண்ணி காட்டும் சமூக விரோதியும், சங்கீதாவை கடத்தியவனும் ஒருவனே. ஏன் கடத்தினான்... எப்படி ரித்தீஷூம், ரமணாவும் வில்லனை வீழ்த்தினார்கள் என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சரவண சக்தி.

WD
ஜோக்கர் என்று அழைத்தவர்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் தந்திருக்கிறார் ரித்தீஷ். பில்டப்புகளை குறைத்து நடிப்பில் கவனம் வைத்தால் கோடம்பாக்கத்தில் கொடி நாட்டலாம் என்பதற்கு தடயங்கள் தெரிகிறது ரித்தீஸ் நடிப்பில். இருந்தாக்கா அள்ளிக்கொடு பாடலில் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு காட்டுவதெல்லாம் ஓவருங்கண்ணா.

ரமணாவுக்கு இது மறுவாழ்வு உணர்ந்து நடித்திருப்பதால் உள்ளத்தில் இடம் பிடிக்கிறார். கீர்த்தி சாவ்லா, சங்கீதா, அவரது கணவராக வரும் ஸ்ரீமன் ஆகியோரும் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள்.

நரம்புத் தளர்ச்சி வில்லனாகவும், அவருக்கு உதவும் போலீஸ் அதிகாரியாகவும் ஆனந்தராஜுக்கு இரண்டு வேடம். முன்னதில் டிஸ்டிங்ஷன், பின்னதில் ஜஸ்ட் பாஸ்.

இசையும், ஒளிப்பதிவும் கதைக்கு சேதாரம் செய்யாமலிருப்பதே ஆறுதல். சங்கீதாவின் மகனை காப்பாற்ற முயலும் காட்சியும், அந்த ரயில் நிலையக் காட்சியும் விறுவிறு. ரித்தீஷின் பில்டப் திணிப்புகள் நறநற. ஹாலிவுட் செல்லுலாரை தமிழுக்கு ஏற்றபடி மாற்றியதில் வெற்றி பெற்றிருக்கிறார், அறிமுக இயக்குனர் சரவண சக்தி.

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments