Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலி வருது - ‌விம‌ர்சன‌ம்

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (10:24 IST)
webdunia photoWD
ரமேஷ், மல்லிகா கபூர், சரண்யா, கருணாஸ், மணிவண்ணன் நடிப்பில் ராஜசேகரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ஜி.வி. குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம். தயாரிப்பு ஆண்டனி.

படத்தில் நாயகன் ரமேஷ்தான் என்றாலும் இன்னொரு நாயகன் போல முக்கிய பாத்திரமாக இருப்பது கனவு. இது யதார்த்த கதையா அதீத கற்பனையா என்று யோசிப்பதற்குப் பதில் சிரிக்க வைப்பதற்கானது என்று நினைத்துக் கொள்ளலாம்.

பெற்றோர் சொல்லைத் தட்டாதவர் ரமேஷ். அவர்கள் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறார். தன் நண்பன் கருணாசுடன் பஸ்ஸில் போகிறார். அப்போத ஒரு கனவு. மல்லிகா கபூரின் திருமணம் நிற்கிறது. மனமிறங்கி அவருக்கு வாழ்க்கை கொடுக்க முடிவு எடுக்கிறார் ரமேஷ். தாலி வாங்க அவசரமாக ஓடுகிறார் கருணாஸ். ஆனால் போன இடத்தில் லாரியில் அடிபட்டுச் சாகிறார். இப்படி ஒரு கனவு. தந்தை மணிவண்ணன் மாரடைப்பில் இறப்பது போல் இன்னொரு கனவு.

கனவில் கண்டபடியான மல்லிகா கபூரை நேரில் பார்த்த ரமேஷ் காதல் கொள்கிறார். திருமணம் நடந்ததா.... கனவில் கண்டபடி கருணாஸ், மணிவண்ணன் ஆனார்களா என்பதுதான் புலிவருது கதை முடிவு.

பொருத்தமான தலைப்பு. புலி வருது புலி வருது என்று பயப்படுவது போல் அசம்பாவிதம் நடக்குமோ... என்று நம்மை பரபரக்க வைக்கும்படி சிரிப்பு முலாம் பூசியிருக்கிறார்கள் காட்சிகளில்.

கலகலப்பான, கணவன் - மனைவியாக மணிவண்ணன், சரண்யா அவர்களது மகன் ரமேஷ், நண்பன் கருணாஸ் என்று அறிமுகம் ஆரம்பமே அமர்க்களப்படுத்துகிறார்கள்.

கனவில் வந்த நாயகி மல்லிகா கபூரை நேரில் பார்க்கும் ரமேஷ் அதிர்ச்சியடைந்து பயப்படுவதும் பிறகு காதல் வயப்படுவதும் சுவாரஸ்யமான எபிசோட்.

மல்லிகாவோ ஒரு போட்டோவை வைத்துக் கொண்டு கல்யாணக் கனவு காண்கிறார். இன்னொரு கனவுப்படி தன் அப்பா மணிவண்ணன் மாரடைப்பால் இறந்து விடக் கூடாது என்று பயந்த ரமேஷ் டாக்டர்களை ஏற்பாடு செய்து கூடவே வைத்துக் கொண்டு படுகிற தவிப்பு நமக்கு சிரிப்பு. சில காட்சிகளில் நடிப்பை கோட்டை விடுகிறார்.

நண்பனின் கனவு பற்றி பயந்த கருணாஸ் தூக்கமில்லாமல் தவிப்பது சரியான கரவெடிச் சிரிப்பு. சோதனை முயற்சியாக பலிக்கிறதா என்று கனவை டெஸ்ட் செய்வதற்காகவே நிஜமாகவே தாலி வாங்க சாலையை குறுக்கே கடக்க நினைக்கிற கருணாஸ்... எதிரே வரும் லாரியைப் பார்த்து அலறி பீதியில் நிற்க, வருகிற லாரியைச் சிலர் தள்ளிக் கொண்டு வருவது வெடிச் சிரிப்பு. கருணாஸ் காமெடியில் புகுந்து விளையாடுகிறார்.

மனநல மருத்துவர் லிவிங்ஸ்டனைப் பார்க்கப் போனவர்கள், அங்கே ஜெபம் செய்து கொண்டிருக்கும் பாதிரியாரிடம் ஆசி கேட்க... உங்கள் கனவு நனவாக ஆண்டவன் ஆசிர்வதிப்பாராக என்கிற போது புலிவருது பார்ட்டிகள் அலறி விடுகிற காட்சி சிரிப்போ சிரிப்பு. மனநல மருத்துவராக வருகிறார் லிவிங்ஸ்டன்.

கனவு பலித்து விடுமோ என்று ரமேஷ் பயப்படுகிறார். தன் கனவு பலிக்காதா என்று மல்லிகா கபூர் ஏங்குகிறார். இப்படி கனவுக்கும் நனவுக்கும் நடக்கும் போரட்டத்தை சிரிக்கும்படி கூறியிருக்கிறார் இயக்குநர். அதற்கேற்ப ஒளிப்பதிவு இசை.

மூட நம்பிக்கை கூடாது என்று கருத்து சொல்லியிருக்கிறார் பயமுறுத்தி சிரிக்க வைத்து.

லாஜிக் மறந்து இந்த காமெடி மேஜிக்கை ரசிக்கலாம். மொத்தத்தில் புலிவருது படம் பார்த்து சிரிப்பு வருது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments