Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொல்லாதவன் - விமர்சனம்

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2007 (14:52 IST)
webdunia photoWD
தீபாவ‌ளி‌க்கு வ‌ந்த பட‌ங்க‌ளி‌ல் தனு‌‌ஷ‌் நடி‌த்து பாலு மகே‌ந்‌திரா‌வி‌ன் ‌சீட‌ர் வெ‌ற்‌றிமாற‌ன் இய‌க்‌கிய பொ‌ல்லாதவ‌ன், ம‌க்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் முத‌ல் இட‌த்‌தி‌ல்‌ இரு‌க்‌கிறது.

தனுஷ், திவ்யா, சந்தானம், கருணாஸ், அஞ்சு, பானுப்ரியா, டேனியல் பாலாஜி நடிப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு குரூப் கம்பெனி.

ஒரு சிறு பொறிதான் பெரு நெருப்பாகிறது. ஒரு சிறு சம்பவம் மனித வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும் காரியத்தைச் செய்துவிடும். தனுஷ் கஷ்டப்பட்டு ஒரு பல்சர் பைக் வாங்குகிறார். அது திடீர் என்று காணாமல் போய்விடுகிறது. நல்ல தனுஷ் இதனால் எப்படி பொல்லாதவன் ஆகிறார்... அதன் இடையே ஊடாடும் பிரச்சினைகள் தான் கதை.

மாமனார் படத் தலைப்பில் மருமகன் தனுஷ் நடித்த படம். ஓல்டான கதை என்றாலும் நீட்டாக... கதை சொன்ன வகையில் இயக்குனர் வெற்றிமாறன் நிமிர்ந்து நிற்கிறார். பாலுமகேந்திராவின் சீடராயிற்றே.

வேலையில்லாத இளைஞர் தனுஷ். விரக்தியின் விளிம்பில் நிற்பவர். அவர் வாங்கிய பைக் மூலம் பல பரவசங்களை அனுபவிக்கிறார். அது காணாமல் போனது... கனவு பறிபோன மாதிரி நொந்து நூலாகிறார். அதை மீட்க அவர் செய்வது நீண்ட நெடும்பயணம். பைக்கைத் தேடிப் போனால் சென்னை ரவுடிகளின் - நிழல் உலகம் தென்படுகிறது. அதை டார்ச் அடித்து வெளிக்காட்டும் காட்சிகள் நம்மை நிமி‌ர்‌ந்து உ‌ட்கார வைக்கின்றன.

' புதுப்பேட்டை'யில் நம்ப முடியவில்லை. இதில் ஒல்லி உடம்பு பெர்பாமென்ஸ் நம்ப வைக்கிறது. தாதாக்களை எதிர்த்து செய்யும் போராட்டம் நெருட வைக்காமல் நம்ப வைக்கிறதே நச்! தாதாவை எகிற வைக்கும் துடிப்பான நடிப்பு, நண்பர்களுடன் கலாட்டா செய்வது, காதலியுடன் 'லவ்'வடிப்பது, பைக் பறிபோய் அலைவது, திருடியது தெரிந்து தீயால் சீறுவது என தனுஷ் நடிப்பில் வித்தியாச தோரணம் கட்டுகிறார். சபாஷ் தனுஷ்!

நாயகி திவ்யா ஊட்டி மலைச்சாரல் போல... ரசிக்க வைக்கும் தோற்றம். சில 'லுக்'குகள், சில வார்த்தைகள், சில வசீகரப் புன்னகைகள், சில சிணுங்கல்கள்... அவ்வளவுதான் ஆள் அம்பேல். இது போதாதா ஒரு கதாநாயகிக்கு?

நண்பர்கள் கருணாஸ், சந்தானம் குழுவினர் சிரிப்புக் கூட்டணியில் கருணாஸின் கதை கேட்டே சிரிக்கலாம். வில்லன் செல்வம் நல்ல கண்டுபிடிப்பு. யார் அந்த டேனியல் பாலாஜி இயக்குனருக்கு வெற்றி தேடித் தருகிறார். மலையாள முரளி, பானுப்ரியா, அஞ்சு.. இப்படி சிலரும் நடிக்கிறார்கள் - இயல்பாக.

நிழல் உலகத்தின் குரூர முகத்தை ரவுடி ராஜ்யத்தின் வெளிச்சம் படாத பிரதேசத்தை போதை மருந்து கும்பலின் நடமாட்டங்களை பளிச்சென்று படம்பிடித்துக் காட்டியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

ஒளிப்பதிவு வேல்ராஜ் கடினமாக உழைத்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ்குமாரின் இசையில் எல்லாப் பாட்டும் 'சரி'ப்பாட்டு. `எங்கேயும் எப்போதும்' ரீமிக்ஸ் இப்போதும் குத்தாட்டம் போட வைக்கிறது.

வன்முறையைக் குறைத்து நன்முறைகளை அதிகம் காட்டியிருந்தால் வெற்றிமாறனின் புகழ் மேலும் கூடியிருக்கும்.

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

Show comments