Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பசாமி குத்தகைதாரர்

Webdunia
கரண ், மீனாட்ச ி, வடிவேல ு, சக்திகுமார் அல்வா வாசு நடிப்பில் ஸ்ரீதர் ஒளிப்பதிவில் தினா இசையில் புதுமுக இயக்குநர் மூர்த்தி இயக்கியுள்ள படம். தயாரிப்பு ப்ரண்ட்ஸ் சினிமா.

சைக்கிள் ஸ்டாண்ட் குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் கருப்பசாமிதான் கரண். தாயில்லாப் பெண் ராசாத்தி தான் மீனாட்சி.

தானுண்டு தன் வேலையுண்ட ு, மாலை நேரங்களில் நாடகம் கூத்து மாறுவேடம் என்று இருப்பவன் கருப்பசாமி. ரஜினி மாதிரி அச்சு அசலாக வேடம் போட்டு அரங்கில் தோன்றி மகிழ்விப்பதால் ஜெராக்ஸ் என்று செல்லப் பெயர் க.சாமிக்கு. மருத்துவக் கல்லூழியில் படிக்கும் ராசாத்தி ஸ்டேண்டுக்கு சைக்கிள் விட வருகிறாள். அவ்வப்போது சந்திக்கும் போது கருப்பசாமியின் பேச்சு செயல்கள் தன் தாயில் நடத்தையைப் போலிருப்பதால் ராசாத்தி மனத்தில் இனம்புரியா மின்னல் அடிக்கிறது. தாயின் ஆண்வடிவாய் தோன்றும் க.சாமியிடம் மனம் திறக்கிறாள் ராசாத்தி. தன் படிப்பு தரெடருமோ என்கிற பயத்தைக் கூற ி, தொடர்ந்து படிக்க உதவுமாறு வேண்டுகிறாள். சரியென்று க.சாமி ஒப்புக் கொள்கிறான். கரிசனம் காதலாகிறது. அவள் வீட்டில் எதிர்ப்புகள். படிப்பை நிறுத்தி கல்யாண முயற்சிகள் நடக்கின்றன. தடுத்து நிறுத்தி படிக்க வைக்க வலியுறுத்துகிறாள் கருப்பசாமி. நீ விலகிக் கொண்டால ், அவளைப் படிக்க ராசாத்தியின் படிப்புக்காகத் தன் காதலை விட்டுக் கொடுக்கிறான் க.சாமி. அவர்கள் கொடுத்த வாக்கை மீறுகிறார்கள். க.சாமி வெண்டெழுகிறான். முடிவு என்ன என்பது தான் மீதிக் கதை.

Webdunia
தீடகாத்திர உடம்ப ு, மதுரை மொழி என்று கரண் கருப்பசாமியாக பொருந்தி அசத்துகிறார். மதுரை நிறம் உடம்பில் இல்லாத போதும் கரணை ரசிக்க முடிகிறது. எடுத்ததெற்கெல்லாம் அரிவாளைத் தூக்கி சண்டை போடாமல் அடக்கி வாசித்து கவர்கிறார். மோதல் சந்தர்ப்பங்கள் இருந்த போதும் அறிவால் பேசிக் கவர்ந்து அரிவாள்களை கீழே போட வைப்பது இயக்குநரின் புத்திசாலித் தனத்துக்கு உதாரணம். இவ்வளவு வீராவேசமாக சண்டை போட வரும் மீனாட்சியின் குடும்பத்தினர் கரணின் வாய்ப் பேச்சைக் கேட்டு சும்மா திரும்பவிடுவது நம்ப முடியவில்லை என்றாலும் ரசிக்க முடிகிறது.

புதுமுகம் என்று நம்ப முடியாத நடிப்பு மீனாட்சிக்கு. அச்சு அசலாக பயந்த சுபாவம் மன உறுதி என இரண்டிலும் பளிச்சிடுகிறார். தலையை மழித்து வழுக்கைத் தலையுடன் வரும் சக்திகுமார் நினைவில் நிற்கிறார். படத்தில் தோன்றும் அசலான பிற மதுரை முகங்களும் படத்திற்குப் பலம் சேர்க்கிறார்கள்.

படித்துறை பாண்டியாக வரும் வடிவேலுவின் திருடுகள் தில்லுமுல்லுகள் ஒவ்வொன்றும் சரவெடி. கரண்-மீனாட்சி நாயகன் நாயகியாக ஒரு பக்கம் படத்தை தூக்கி நிறுத்தினால் வடிவேலு அண்ட் கோ அடிக்கும் "அலப்பறை" யில் இன்னொரு பக்கம் நிமிர்ந்து நிற்கிறது படம். படத்தின் வெற்றி வாய்ப்பில் பாதியை ஈடு செய்கிறார் வடிவேலு. தினா முடிந்த அளவுக்கு கரம் மசாலாவை இசையில் தூவி தாளித்திருக்கிறார்.

படத்தில் ஆங்காங்கே தலை காட்டும் லாஜிக் மீறல்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் பெண்கள் விலை முன்னிலைப்படுத்திய காதல் கதையை போரடிக்காமல் சொல்லியிருக்கிறார்கள். இதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

Show comments