அயன்

Webdunia
webdunia photoWD
ஏவி.எம். தய ா‌ ரிப்பில் சூர்யா நடித்திருக்கும் இரண்டாவது படம். கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் வெளிவரும் இரண்டாவது படமும்கூட. சூர்யா ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

இருபத்தைந்து வயது இளைஞராக இதில் நடித்துள்ளார் சூர்யா. சென்னை திருவல்லிக்கேணியில் தொடங்கிய படப்பிடிப்பு நமீபியா, தான்சானியா என வெளிநாடுகளில் தொடர்ந்தது.

நமீபியாவில் பாடல் காட்சி ஒன்றும், தான்சானியாவில் சண்டைக் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டன. தான்சானியா சண்டைக் காட்சியில் கனல் கண்ணனுடன் ஆப்ப ி‌ ரிக்க சண்டைக் கலைஞர்களும் பணியாற்றினர்.

படத்தில் வில்லனாக இந்தி நடிகர் ஆகாஷ்தீப் சைகல் அறிமுகமாகிறார். இவரைத் தவிர விவேக், பிரபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

எழுத்தாளர்கள் சுபா கதை, வசனம் எழுதியுள்ளனர். ஹாரிஸ் ஜெயரா‌ஜ் இசை. பாடல்கள் வைரமுத்து, நா. முத்துக்குமார், பா. விஜய். ஒளிப்பதிவு எம்.எஸ். பிரபு. சண்டைப் பயிற்சி கனல் கண்ணன். எடிட்டிங் ஆண்டனி.

சன் பிக்சர்ஸ் படத்தை வெளியிடுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வசூலை அள்ளும் தாய் கிழவி!.. 3 நாள் வசூல் அப்டேட்!..

கார் விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா!... ஓட்டுனர் மரணம்!...

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை.. நடிகர் ஆரி ஆதங்கம்..!

சூர்யாவின் கையில் உள்ள கைக்குழந்தை யார்? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..!

Show comments