Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குசேலன் - முன்னோட்டம்!

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (18:32 IST)
webdunia photoWD
கதபறயும் போள் படத்தின் ரீ-மேக். அதில் மம்முட்டி நடித்த காட்சிகள் படத்தில் எட்டு சீன்களே வரும். தமிழில் நடிப்பது ரஜினி என்பதால், மூன்றாவது சீனிலிருந்து கடைசி காட்சி வரை வரும்படி கதையை மாற்றி எழுதியுள்ளார் பி. வாசு.

கிராமத்து ஏழை பார்பர் பாலனாக பசுபதி. அவரது மனைவி ஸ்ரீதேவியாக மீனா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். வறுமையான சூழலில், சூப்பர் ஸ்டார் அசோக்ராஜ் (ரஜினி) பாலனின் பால்ய நண்பன் என தெரிய வருகிறது.

webdunia photoWD
நண்பனிடம் உதவி கேட்கச் சொல்லி பாலனை சுற்றமும் நட்பும் வற்புறுத்துகிறது. பாலனின் தன்மானம் அதனை தடுக்கிறது. பாலன், அசோக்ராஜ் சந்திப்பு நிகழ்ந்ததா? பாலனின் வறுமை நீங்கியதா என்பது நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ்.

படம் குறித்து மேலும்...

கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

நயன்தாரா ரஜினி ஜோடியாக நடித்துள்ளார். காமெடிக்கு வடிவேலு.

ரஜினி இதில் பதினான்கு கெட்டப்புகளில் வருகிறார். ஜேம்ஸ்பாண்ட் கெட்டப் அதிலொன்று.

சினேகா, குஷ்பு போன்ற முன்னணி நடிகைகள் இடம்பெறும் பாடல் காட்சியும் படத்தில் உண்டு.

இசை ஜி.வி. பிரகாஷ். மொத்தம் ஐந்து பாடல்கள். இதில் மூன்றில் ரஜினி நடித்துள்ளார். நயன்தாரா, ரஜினி இடம்பெறும் பாடல் காட்சியை எகிப்து பிரமிடு போன்ற செயற்கை அரங்கில் பிரமாண்டமாக எடுத்துள்ளனர்.

சினிமா குறித்து வாலி எழுதிய பாடலில் ரஜினி ரசிகர்களையும் நடிக்க வைத்துள்ளார் பி. வாசு.

அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments