ஒரு கணவன் மனைவி. அன்னியோன்யமான தாம்பத்யம். மகிழ்ச்சிக்கு குறைவில்லாத அக்கம் பக்கத்தினர் சூழ்ந்த அபார்ட்மெண்ட். திடீரென ஒருநாள் அனைத்தும் பயத்தின் சாயம் பூசிக்கொள்கிறது. ஏன் எப்படி என்ற திகில் கேள்விகளுக்கான விடையே விக்ரம் கே. கிருஷ்ணாவின் யாவரும் நலம்.
webdunia photo
WD
அன்பான கணவன் மனைவியாக மாதவன், ந ீத ு சந்திரா நடித்துள்ளனர். இந்திப் படங்களில் நடித்துவரும் நீதுவுக்கு இது முதல் தமிழ்ப் படம். க்ரைம் த்ரில்லரான இப்படம் தமிழ், இந்தி என இருமொழிகளில் தயாராவதால், மேலும் சில இந்தி முகங்கள் படத்தில் உள்ளன.
படம் குறித்து மேலும் சில தகவல்கள்...
யாவரும் நலம் என்பது படத்தில் வரும் தொலைக்காட்சி தொடரின் பெயராம்.