Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரத்-காஜல் அகர்வால் நடிக்கும் பழனி

Webdunia
சனி, 29 டிசம்பர் 2007 (11:44 IST)
webdunia photoWD
ஷக்தி சிதம்பரம் சினிமா பேரடைஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் படம் பழனி. பரத் - காஜல் நாயகன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில், குஷ்பூ, பிஜுமேனன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மூத்தவளாப் பொறந்தா தாயப்போலடா, இளையவளாப் பொறந்தா மகளப் போலடா - இது பழனி படத்தில் இயக்குநர் பேரரசு எழுதிய பாடலின் வரி மட்டுமல்ல, படத்தின் கருவும் இதுதான்.

தாய்க்கும் மேலாக தனது அக்காவை நினைக்கிறார் பரத். தனது தம்பி மீது அன்பைப் பொழிகிறார் அக்கா குஷ்பு. இவர்களுக்கிடையே நிகழும் பாசமிகு சம்பவங்களே பழனி படம்.

எக்ஸ்போர்ட் கம்பெனி முதலாளியாக குஷ்பூவும், கார் டிரைவராக பரத்தும், காஜல் ஜவுளிக்கடை சேல்ஸ்கேர்ளாகவும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார் பரத். காமெடியிலும் கால் பதித்திருக்கிறார் என்று கூறினார் இயக்குநர்.

பழனி படத்தின் கதைக்களம் சென்னை. பிளாஷ்பேக்கில் பழனியின் சொந்த ஊராக பழனியில் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. பழனி படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன.

இப்படத்தில் ஒரு பாடலை இயக்குநர் பேரரசு சொந்தக் குரலில் பாடியுள்ளார். இந்தப் படத்தில் பேரரசு, ஸ்ரீகாந்த் தேவாவின் கூட்டணி இசையில் பாடல்களை பட்டையைக் கிளப்பியிருக்கின்றன.

இதில் பஞ்ச் டயலாக்குகளும் பின்னியிருக்கின்றன. பேரரசு இதுவரை எடுத்த படங்களிலேயே க்ளைமாக்சுக்காக அதிக நாட்கள் எடுத்துக் கொண்ட படம் பழனி தான். கம்யூட்டர் கிராபிக்சும் இதில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

பழனி பொங்கலுக்கு வெளி வருகிறது.

இசை - ஸ்ரீகா‌ந்‌த ் தேவா
ஒளிப்பதிவு - ‌விஜ‌ய்‌மி‌ல்ட‌ன்
படத் தொகுப்பு - ‌வ ீ. ஜெ‌ய்ச‌ங்க‌ர்
கலை- ‌ஜீக ே
சண்டைப் பயிற்சி - தள‌ப‌த ி ‌ தினே‌ஷ‌்
தயாரிப்பு நிர்வாகம் - கா‌ர்‌த்‌தி‌க்
தயாரிப்பு மேற்பார்வை - பாபு‌ஜ ி

தயா‌ரி‌ப்ப ு - ராத ா ஷ‌க்‌த ி ‌ சித‌ம்பர‌ம ்
கதை, திரைக்கதை, பாடல்கள ், இயக்கம் - பேரரச ு
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

Show comments