Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌வின‌ய்-பா‌வ்னா நடி‌க்கும் ஜெயம் கொண்டான்

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (14:08 IST)
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் 14வது படம் `ஜெயம் கொண்டான்.' இதில் வினய் ஜோடியாக பாவனா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஏவிஎம்-ல் கடந்த 14ம் தேதி பூஜையுடன் துவங்கியது.

பிரபல இயக்குனர் மணிரத்னத்தை 'பகல் நிலவு' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்த இதே நிறுவனம் மூலம் அவரது உதவியாளரான ஆர். கண்ணன் என்பவர் `ஜெயம் கொண்டான்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இதுதான் எங்களின் இலக்கு என்று குறிவைத்து பயணிக்கும் மூவரின் வாழ்க்கையில் எந்த இலக்கும் இல்லாமல் வாழும் ஒருவன் குறுக்கிட... அவனை வென்று லட்சிய கனவுகளை எப்படி வென்றான் என்பதே `ஜெயம் கொண்டான்'.

இதில் `உன்னாலே உன்னாலே' புகழ் வினய் ஹீரோவாக நடிக்கிறார். இவரது ஜோடியாக பாவனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் லேகா வாஷிங்டன் நடிக்க மற்றும் நட்சத்திர தேர்வு நடைபெற்று வருகிறது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

பாடல்கள் - கவிஞர் வாலி, நா. முத்துகுமார், கபிலன், யுகபாரதி
இசை - வித்யாசாகர்
ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம்
எடிட்டிங் - வி.டி.விஜயன்
கதை, திரைக்கதை, இயக்கம் - ஆர். கண்ணன்
தயாரிப்பு - டிடிஜி தியாகசரவணன், செல்வி தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

Show comments