Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் அறுவடை

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2007 (14:37 IST)
தேசிய அளவிலான பிரச்சினைக்கு தீர்வு சொல்ல புறப்பட்டுவிட்டது "அறுவடை" டீம். இந்த அறுவடை கதிர்களை அல்ல பதர்களை எ ன சொல்கிறார் தயாரிப்பாளர் ஹென்றி.

மறப்போர் செய்யும் அர்ஜூனாக அர்ஜூனும் அறப்போர் செய்யும் கிருஷ்ணனாக மம்முட்டியும் இணைந்து நடத்தவுள்ள இந்த அறுவடையில் புலனாய்வுத் துறை அதிகாரி வேடம் மம்முட்டிக்கு, காவல் துறையின் ஸ்பெஷல் பிரான்ச் அதிகாரியாக அர்ஜூன் நடிக்கிறார். AS Pயாக ஜெய் ஆகாஷ் நடிக்கிறார்.

ஹீரோக்களுக்கான ஜோடி புறாக்களும் உண்டு. வெறும் கனவு பாடலுடன் காணாமல் போகாமல் கதைக்கு வலுசேர்க்கும் கதாபாத்திரத்தில் வருகிறார்கள். மம்முட்டிக்கு ஜோடியாக வரும் சினேகா பைலட்டாகவும், அர்ஜூனின் காதலியாக வரும் மம்தா பறவைகள் பற்றிய ஆராய்ச்சியாளராகவும் நடிக்கின்றனர். காமெடியில் கலக்க ஜெகதீஷ், வில்லனாக மிரட்ட தீபக் ஜே.டி.யும் இடம்பெறுகின்றனர்.

' வறட்சிக்கு சாவுமணி அடித்து, விவசாயிகளுக்கு ஜீவமணி ஒலிக்க வைப்பதே அறுவடையின் நோக்கம்' என்கிறார் தயாரிப்பாளர் ஹென்றி. இதில் திரைக்கதையாசிரியராகவும் தன்னை அடையாளம் காட்டுகிறாராம் படத்தை இயக்குவது அரவிந்த். வித்தியாசாகர் இசையில் வைரமுத்து, பா.விஜய், யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளனர்.

படத்தின் கான்செப்டை பிரதிபலிப்பது போன்ற ஒரு பாடலை கவிப்பேரரசுவின் பேனா வார்த்தெடுத்துள்ளதாம்.

" தாய் நாடே உயிரே உயிரின் வடிவே
உன் புகழ் வாழ்க!
பார் புகழ் உலகின் கொடியில்
உம் கொடி உயருக!"
எனத் தொடங்கும் இப்பாடல் வரிகள் செவிகளில் ஊடுருவி சிந்தையில் சுரக்கும்.


அர்ஜூன் படங்களிலேயே மிகப் பிரம்மாண்டமான செலவு இந்த படத்திற்காகத்தான் செய்யப்பட்டுள்ளதாம். சென்னையின் பழைய மத்திய சிறைச்சாலையில் 14 லட்சம் ரூபாய் செலவில் செட் போட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த இந்திய திரைப்படங்களிலும் இல்லாத அளவில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். அர்ஜூன் - மம்தா பங்குபெறும் ஒரு பாடல் காட்சி மட்டும் வெளிநாடுகளில் படமாக்கவுள்ளது.

சென்னை, கொச்சின், மார்த்தாண்டம், தேங்காபட்டணம், கன்னியாகுமரி, இளையான்குடி உள்ளிட்ட பலதரப்பட்ட இடங்களை பதிவு செய்ய போகிறது. ராஜேஸ்யாதவின் காமிரா, டி.ஐ. கிராபிக்ஸ், 3டி உள்பட நவீன தொழில்நுட்பங்களுடன் அறுவடையை அழகூட்டவுள்ளது.

இத்தனை சிறப்புகளும், சிலிர்ப்புகளும் உள்ள அறுவடை பொங்கலுக்கு சுவையூட்ட வருகிறது.

கோலங்கள், பாரதிகண்ணம்மா, மறுமலர்ச்சி, புதுமைபித்தன், கள்ளழகர் வரிசையில் பங்கஜ் புரொடக்‌ஷனுக்கு இப்படமும் மாபெரும் வெற்றியை அறுவடை செய்யும் என்று நம்பிக்கை முகம் காட்டுகிறார் தயாரிப்பாளர் ஹென்றி.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

இயக்கம் - அரவிந்த்
வசனம் - விஜய்ரங்கநாத்
திரைக்கதை - ஹென்றி
இசை - வித்யாசாகர்
பாடல்கள் - வைரமுத்து, பா.விஜய், யுகபாரதி
ஒளிப்பதிவு - ராஜேஷ்யாதவ்
எடிட்டிங் - உதயசங்கர்
கலை - முத்துராஜ்
தயாரிப்பு - பங்கஜ் புரொடக்‌ஷன்ஸ் ஹென்றி

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments