Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர் ராஜசேகர் நடிக்கும் உடம்பு எப்படி இருக்கு...

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2007 (14:58 IST)
வெப்துனியா
இது தாண்டா போலீஸ், எவனா இருந்தா எனக்கென்ன வெற்றிப்படத்தை தொடர்ந்து டாக்டர். ராஜசேகர் தயாரித்து நட ிக்கும் படம் உடம்பு எப்படி இருக்கு. தெலுங்கில் " எவடேடே நாகேந்தி" என்ற பெயரில் மாபெரும் வெற்றிபெற்ற இப்படம் தமிழுக்கு ஏற்றவாறு பல மாற்றங்கள் செய்து படமாக்கப்பட்டு வருகிறது.

டாக்டர். ராஜசேகர் கதாநாயகனாக நடிக்க ஜோடியாக நடிக்கிறார் சம்விருதா, இவர்களுடன் முக்கிய வேடத்தில் முமைத்கான், ரகுவரன், கலாபவன் மணி, கோட்டா ஸ்ரீனிவாசராவ், தேவராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கதாநாயகன் சூர்யா நன்கு படித்தவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றிவிட்டு ஊருக்குத் திரும்புகிறார். அனைத்து இந்திய குடிமகன்களும் நாட்டுக்காக நற்பணி செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவர். இந்த நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்பதைவிட இந்த நாட்டுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்ட ும் என்று நினைப்பவர். இத்தகைய எண்ணங்களோடு இன்ற ை ய தலைமுறை இளைஞர்களை ஊக்குவித்து அரசியலில் ஈடுபட வைக்கிறார்.

நாட்டு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அவர் சூழ்நிலை காரணமாக அவரது மாநில பிரச்சனைகளில் தன் கவனத்தை திருப்ப வேண்ட ி வருகிறது. தனது எதிர்ப்பை வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறார். அரசியலில் கலாபவன ் மணியின் ஆதிக்கத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் எதிர்க்கிறார். முமைத்கான் மிகவும் கண்டிப்பான பெண் போலீஸ் அதிகாரி, சூர்யாவின் நேர்மையை கண்டு அவருக்கு ஆதரவு அளிக்கிறார். இந்த உள்துறை அமைச்சர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற மக்களுக்கு உணர்த்துகிறார்.

எந்தவித தண்டனையும் அளிக்காமல் வில்லன்களை எவ்வாறு பணிய வைக்கிறார் என்பதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக இயக்குகிறார் திருமதி. ஜீவிதா ராஜசேகர். தமிழில் இவர் இயக்கும் முதல் நேரடி படம் இது. விக்ரம் நடித்த சேது படத்தை டாக்டர். ராஜசேகர் நடிப்பில் தெலுங்கில் இயக்கி மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவு : ஏ.மது
இசை : சின்னா
எடிட்டிங் : என்.ஹரி
கலை : ரமணா
சண்டைப் பயிற்சி : கனல் கண்ணன், ராஜூ
நடனம் : கிருஷ்ணாரெட்டி
வசனம் : வி.செல்வா
மக்கள் தொடர்பு : நிகில்
கதை-திரைக்கதை : டாக்டர். ராஜசேகர்
தயாரிப்பு : ஆண்டாள் ஆர்ட்ஸ்
டைரக்ஷன் : ஜீவிதா ராஜசேகர்...
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments